2021 மே 12, புதன்கிழமை

'உழைத்து வாழ வேண்டும்'

George   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 


மூன்று சில்லு சைக்கிளை கடையாக்கி அதன்மூலம் வருமானத்தை பெற்று வாழும் மாற்றுவலுவுள்ள ஒருவரை முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் சந்திக்க கிடைத்தது.


முல்லைத்தீவு கள்ளப்பாட்டை சேர்ந்த கந்தராசா கணேசலிங்கம் (வயது 48) என்பவர் சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளார்.


தற்போது தனது தங்கையின் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் தனக்கென்று வருமானம் பெறும் நோக்கில் தனது மூன்று சில்லு சைக்கிளை கடைபோல அமைத்துள்ளார்.


அதனுள் கச்சான், புளுக்கொடியல் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்து, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக விற்பனை செய்து வருகின்றார்.


இது தொடர்பாக அவர் கூறுகையில், தினமும் காலை 8 மணிக்கு மாவட்ட செயலகம் முன்பாக வந்து   மாலை 3 மணிவரையில் விற்பனை செய்வேன்.


ஒரு நாளைக்கு 700 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்வேன். அதன்மூலம் 180 ரூபாய் தொடக்கம் 200 ரூபாய் வரையில் இலாபம் கிடைக்கும். 


எனது சகோதரியின் 7 பேர் கொண்ட குடும்பத்துடன் இணைந்து நான் வசித்து வருகின்றேன். எனது இந்த சிறிய வருமானம் மற்றும் எனது சகோதரியின் கணவரின் வருமானத்துடன் வாழ்கின்றோம். 


மாற்றுத்திறனாளியான எனக்கு எவ்வித அரசாங்க உதவிகளும் கிடைப்பதில்லை என்று கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .