2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி மாவட்டம் முதலிடத்தில்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் சுயதொழில் ஓய்வூதியத் திட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு அதிக பயனாளிகளை இணைத்த மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் திகழ்வதாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான இணைப்பாளர் பாக்கியராசா பிரதீபன் செவ்வாய்க்கிழமை (10) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் 2,349 பேர் இந்த சுயதொழில் ஓய்வூதியத்தில் இணைந்துள்ளனர். இரண்டாமிடத்தில் 2,163 பயனாளிகள் இணைந்த குருநாகல் மாவட்டமும், மூன்றாமிடத்தில் 1,900 பயனாளிகளை இணைந்த புத்தளம் மாவட்டமும் உள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு இந்தத் திட்டம் செயற்படுத்த ஆரம்பிக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டு அதிக பயனாளிகளை இணைத்த மாவட்டமாக மாறியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 1860 பயனாளிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனின் வழிகாட்டலில் 4 பிரதேச செயலர்களும் சிறந்த பங்களிப்பை வழங்கியமை அதிக பயனாளிகளை இணைக்க உதவியது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .