2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

அனர்த்த குறைப்பு முகாமைத்துவ செயலமர்வு

George   / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்


வேள்ட் விஷன் நிறுவனத்தின் நிதியுதவியில் கிளிநொச்சி மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் சமூக அடிப்படையிலான அனர்த்த குறைப்பு முகாமைத்துவம் என்னும் செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களில் நடைபெற்றன.


பிரதேச மட்ட அனர்த்த குழுக்கள், பிரதேச சபை, பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான உத்தியோகத்தர்கள் என 39 பேர் இதில் கலந்துகொண்டனர்.


கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணர் ஜி.குருபரன், கிளிநொச்சி மாவட்டச் செயலக அனத்த முகாமைத்து உதவி பணிப்பாளர் க.சுகுணதாஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.


காலநிலை மாற்றங்களின் போது மக்கள் எதிர்நோக்கும் அனர்த்த பாதிப்பு அது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள், அனர்த்தம் ஏற்படும் போது மேற்கொள்ளவேண்டிய சுகாதார மற்றும் மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகள், கிராம மட்டத்தில் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வூட்டல் மற்றும் அது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பன தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .