2021 மார்ச் 01, திங்கட்கிழமை

பஸ் மீது கல்வீச்சு தாக்குதல்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

இலங்கை போக்குவரத்துச் சபையின் முல்லைத்தீவு சாலைக்கு சொந்தமான பஸ் மீது நேற்று வியாழக்கிழமை இரவு, கூழாமுறிப்பு பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த பஸ்ஸின் சாரதி, முள்ளியவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

முல்லைத்தீவு - வவுனியாவுக்கு இடையில் நாளாந்தம் பகல் 2 மணிக்கு முல்லைத்தீவிலிருந்து வவுனியாவுக்கும், மாலை 6.30 மணிக்கு வவுனியாவிலிருந்து முல்லைத்தீவுக்கும் இந்த பஸ் சேவையில் ஈடுபடுவது வழக்கமாகும்.

சம்பவம் இடம்பெற்ற நேற்றைய தினம் குறித்த பஸ் வழமை போல மாலை 6.30 மணிக்கு வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்றுகொண்டிருந்த போது கூலாமுறிப்பு பிரதேசத்தில் வைத்து கல்வீச்சு இடம்பெற்றுள்ளது.

ஸ்கூட்டிபப் ரக மோட்டார் சைக்கிலில் வந்த அடையாளம் தெரியாத இருவர் பஸ் சாரதி பக்கம் கல்வை வீசியுள்ளார். இதனால், சாரதி பக்கமுள்ள கண்ணாடி பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், பஸ் சாரதிக்கோ அல்லது பயணிகளுக்கோ எதுவும் ஏற்படவில்லை.

எனினும், முன்பக்கம் வசலில் நின்றுகொண்டிருந்த நடத்துனரின் கண்ணுக்குள் கல்வீச்சினால் சேதத்துக்குள்ளான பஸ்ஸின் கண்ணாடித் துகல்கள் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த நடத்துனர் நேற்று வியாழக்கிழமை இரவு மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .