2021 மார்ச் 03, புதன்கிழமை

வன்னித் தேர்தல் தொகுதியில் 94 சதவீத தபால்மூல வாக்குப்பதிவு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

நாடாளுமன்றத் தேர்தலுக்காக வன்னித் தேர்தல் தொகுதியில் தபால் மூலம் 94 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக பிரதி தேர்தல் ஆணையாளர் ஏ.ஓ.எம்.நபீல் தெரிவித்தார். 

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வவுனியா மாவட்டத்தில் 2,670 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,643 பேரும், மன்னார் மாவட்டத்தில் 2,654 பேருமாக வன்னித் தேர்தல் தொகுதியில் தபால் மூலம் வாக்களிக்க 6,967 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 6,588 பேர் வாக்களித்துள்ள நிலையில் 94 சதவீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .