2021 மார்ச் 01, திங்கட்கிழமை

முல்லைத்தீவில் 17,500 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் தேவை

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் 17,500 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கவேண்டிய தேவையிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். 
 
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, கரைதுரைப்பற்று மற்றும் வெலிஓயா ஆகிய ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றத்தின் போது 41,112 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.
 
இந்நிலையில் கடந்த ஐந்து வருடங்களில் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரச நிதியுதவியில் நிரந்தர வீடுகள் அமைத்து வழங்கப்பட்டுள்ளதுடன் சேதமடைந்த வீடுகளும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
 
தற்;போது ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் 17,500 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கவேண்டியிருப்பதாகவும் 2,900 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதனால் அவற்றையும்  புனரமைத்துக்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .