Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கொழும்பு - யாழ்ப்பாணம் ஏ - 9 வீதியின் கிளிநொச்சி பிரதேசத்தில் மஞ்சற் கடவையில் பாதசாரியை பாதையைக் கடந்துகொண்டிருந்த பாதசாரி ஒருவரை மோதிவிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட வாகனமொன்றையும் அதனை சாரதியையும் பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை (22) இடம்பெற்றது.
கிளிநொச்சி நீதிமன்றின் முன்பாக உள்ள மஞ்சற் கடவையூடாக வீதியைக் கடந்த வயோதிபர் ஒருவரை, கிளிநொச்சியிலிருந்து இரணைமடு நோக்கிப் பயணித்த கார் ஒன்று மோதிவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டவேளை பொதுமக்கள் குறித்த வாகனத்தை மறித்து நிறுத்தி, அவ்வாகனத்தையும் சாரதியையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 67 வயதுடைய வயோதிபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 minute ago
48 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
48 minute ago
53 minute ago