2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

சுகாதாரத் தொண்டர்களுக்கான நேர்முகப் பரீட்சை 29,30ஆம் திகதிகளில்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்டத்தில் சுகாதாரத் தொண்டர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு இம்மாதம் 29ஆம் , 30 ஆம் திகதிகளில் மன்னார் - தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள மன்னார் சுகாதார சேவைகள் பணிமனையில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவிருப்பதாக பணிப்பாளர் திருமதி யூட் ரதனி தெரிவித்தார்.

29ஆம் திகதி மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் 30ஆம் திகதி மாந்தை மேற்கு , நானாட்டன், முசலி ஆகிய பிரதேசச் செயலாளர்கள் பிரிவுக்குட்பட்ட விண்ணப்பதாரிகளுக்கும் நேர்முகத் தேர்வு இடம்பெற உள்ளது.

05 பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் இருந்தும் சுகாதார தொண்டர்களுக்கு ஆட்சேர்ப்பிற்காக 960 பேர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும்  அவற்றில் இருந்து 100 பேர் மட்டுமே தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் ரதனி மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--