2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

எஸ்.பி.திஸாநாயக்க இம்மாதம் 31இல் கிளிநொச்சி, வவுனியாவிற்கு விஜயம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி-விவேகராசர)

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சிக்கும் வவுனியாவிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெறும் உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதுடன், கல்வித்திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடவுள்ளார்.

அன்று பிற்பகல் வவுனியாவிற்கு வரும் அமைச்சர் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக நிர்வாகத்தினருடன் வளாக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

அத்துடன், பம்பைமடுவில் உள்ள வளாக கட்டிட நிர்மாணப் பணிகளையும் நேரில் சென்று பார்வையிடுவார் என வவுனியா வளாக முதல்வர் பேராசிரியர் என்.நந்தகுமார் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .