2021 ஜனவரி 23, சனிக்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 319பேர் டிசம்பரில் கைது

Menaka Mookandi   / 2013 ஜனவரி 01 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 319பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வவுனியா மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் கே.எச்.ஜயவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் மூலமாக தின மற்றும் திறந்த நிலை பிடியானை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் இவர்களை விசேட நடவடிக்கையின் மூலம் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது அந்தந்த பகுதி பொலிஸாக்ரின் உதவியுடன் கைது செய்துள்ளதாகவும் இவர்களில் 131பேர் தின பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் எனவும் தெரிவித்த அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .