2025 ஜூலை 07, திங்கட்கிழமை

முல்லைத்தீவில் கைவிடப்பட்ட 2447 வாகனங்களில் 48 வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.சுகந்தினி)

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்களில் 48 வாகனங்கள் கடந்த இருவாரங்களில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் தெரிவித்தார். .

பொதுமக்களால் கைவிடப்பட்ட 2447 வாகனங்களுக்கான பட்டியலொன்று  இராணுவத்தினரால் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டிருந்தது. மேற்படி வாகனங்களை ஒப்படைக்கும் நடவடிக்கைக்கமைய சுதந்திரபுரம் மற்றும் மன்னாகண்டல் பகுதிகளில் வைக்கப்பட்ட வாகனங்களில் 48 வாகனங்களுக்கான அடையாளத்தை உறுதிப்படுத்தி உரியவர்கள் பெற்றுச்சென்றுள்ளதாகவும் அவர் இன்று தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுதந்திரபுரம் பகுதியில் உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக வைக்கப்பட்ட   506 வாகனங்களில் 3 வாகனங்களே உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்;டதாகவும் அதேபோன்று மன்னாகண்டல் பகுதியில் உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக வைக்கப்பட்ட 284 வாகனங்களில் 45 வாகனங்களே உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், அம்பலவன், பொக்கனை, புதுக்குடியிருப்பு ஏனைய பகுதிகளிலும்  கைவிடப்பட்ட வாகனங்கள் வைக்கப்பட்டு கூடிய விரைவில்  உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேற்படி கைவிடப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உரியவர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து தங்களது வாகனங்களுக்கான அடையாளத்தை உறுதிப்படுத்திப்படுத்தி வாகனங்களை விரைவாக பெற்றுச்செல்லுமாறும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0

  • Whistle Blower Saturday, 17 September 2011 01:48 AM

    பத்து வீதமும் இல்லை , எலேக்ஷன் வேலைக்கு உதவியாக இருக்கும்.

    Reply : 0       0

    nakkiran Saturday, 17 September 2011 10:28 AM

    கடமையை சரியாக செய்யுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .