2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சியில் வெள்ளம்: 500 குடும்பங்கள் உறவினர் வீடுகளில்

Super User   / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

கடந்த இரண்டு நாட்களாக கிளிநொச்சியில் தொடர்ந்து மழை பெய்துள்ளதால் 500 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்களது வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளன.

கிளிநொச்சியை அண்டிய தாழ்வான பிரதேசங்கள் மற்றும் உருத்திரபுரம், சாந்தபுரம், பொன்நகர் ஆகிய கிராமங்களில் வெள்ளம் பாய்வதால் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் அவர்களுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிளிநொச்சி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .