2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களை அச்சடித்த சந்தேக நபர்கள் மீதான அடையாள அணிவகுப்பு ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 10 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(விவேகராசா)

போலியான ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களை அச்சடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்கள்  மீதான அடையாள அணிவகுப்பு இன்று வெள்ளிக்கிழமை வவுனியா நீதிமன்றில் நடைபெறவிருந்தது. எனினும்  இரகசிய பொலிஸார் நீதிமன்றுக்கு தாமதமாக வருகை தந்ததினால் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மையில் கையடக்க தொலைபேசி கட்டணமாக ஐயாயிரம் ரூபாய் வவுனியா நவீன கடைத்தொகுதி ஒன்றில் செலுத்தப்பட்ட பின்னர் அந்த நோட்டு போலியானது தெரியவந்தது.

குறித்த தொலைபேசி இலக்கத்தைக் கொண்டு  ஒரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.  அவர் மீதான விசாரணையின்பின் மேலும் 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாட்டின் பல பாகங்களிலும் இவர்கள் போலியான ஐயாயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு விட்டமை  விசாரணையின்போது தெரியவந்துள்ளது. இச்சந்தேக நபர்கள் ஏழு பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .