2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

யுத்தம் காரணமாக சொத்துக்களை இழந்த 658 பேருக்கு நட்டஈடு வழங்க ஏற்பாடு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

யுத்தம் காரணமாக வடக்கில் 1983ஆம் ஆண்டுக்கு பின்னர் வீடுகளையும் சொத்துக்களையும் இழந்தவர்களில் 685 பொதுமக்களுக்கு புனர்வாழ்வு அதிகார சபையினால் நட்டஈடுகள் வழங்கப்படவுள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் நெடுங்கேணியைச் சேர்ந்த இந்தப் பொதுமக்களுக்கான காசோலைகள் எதிர்வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை வைபவரீதியாக வழங்கப்படவுள்ளன.  

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 500 பேருக்கு இரண்டாம் கட்ட கொடுப்பனவு காலை 9மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும், முல்லைத்தீவைச் சேர்ந்த 110 பேர், நெடுங்கேணியைச் சேர்ந்த 85 பேருக்குமான முதல் கட்ட நட்டஈடு கொடுப்பனவு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் வெள்ளி மாலை 3 மணிக்கும் வழங்கப்படும் என புனர்வாழ்வு அதிகார சபையின் வடமாகாண மாவட்ட முகாமையாளர் சி கனகசபாதி தெரிவித்தார்.

இந்த வைபவங்களில் புனர்வாழ்வு மற்றும்  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, மனிதவள அமைச்சர் டி.யூ.குணசேகர, புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் ஈ.ஏ.சமரசிங்க உள்ளிட பலர் கலந்து கொள்வார்கள். என மாவட்ட முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்படுவதினை துரிதப்படுத்தும் நோக்குடன் புனர்வாழ்வு அதிகார சபையின் மாவட்ட அலுவலகம் ஏற்கனவே வவுனியா செயலக வளவினுள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .