2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

உருத்திரபுரம் மூன்றாம் குறுக்கு வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி, உருத்திரபுரம், மூன்றாம் குறுக்கு வீதி இதுவரைப் புனரமைக்கப்படாமையினால் இவ்வீதியை பயன்படுத்தும் இப்பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
 
கிளிநொச்சி, உருத்திரபுரம் பிரதான வீதியில் இருந்து கனகபுரம் வரை செல்லும் மூன்றாம் குறுக்கு வீதி, மிக நீண்டகாலமாக எந்தவித புனரமைப்பு பணிகளும் இன்றிக் காணப்படுகின்றது.
 
மழை காலங்களில் வெள்ளநீர் தேங்கி சேறும் சகதியுமாக இவ்வீதி காணப்படுவதுடன் மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.
 
குறித்த வீதியில் அமைந்துள்ள திருக்குடும்ப சிறுவர் இல்லத்தில் 40 வரையான சிறுவர்கள் தங்கியிருந்து கல்வி கற்று வரும் நிலையில் சிறுவர்கள் இவ்வீதியூடாகவே கிளிநொச்சி இந்துக்கல்லூரி மற்றும் கிளிநொச்சி புனித பற்றிமா றோ.க.வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு சென்று வருகின்றனர்.
 
இதனைவிட இக்கிராமத்தில் உள்ள கர்ப்பிணித்தாய்மார், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் இவ்வீதியையே பயன்படுத்தி வருகின்றனர்.
 
எனவே, கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த வீதியை புனரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .