2024 மே 08, புதன்கிழமை

கனேடியத் தூதுவருடன் சந்திப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இலங்கைகான கனேடியத் தூதுவர் டேவிட் மெக்மிலன், தூதுவராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான முதன்மைச் செயலாளர் வலேரி ஓலேற், ஒட்டாவாவில் இருந்து வருகை தந்திருந்த சமாதானத்துக்கான நீண்டகாலச் செயற்பாடுகளுக்கான பணியகத்தின் அதிகாரிகள் ஆகியோர் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கத்தை வவுனியாவில் வைத்து, நேற்று (27) சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, போருக்குப் பின்னரான காலப்பகுதியில், வன்னிப் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், காணி ஆக்கிரமிப்பு, திட்டமிடப்பட்ட குடியேற்றச் செயற்பாடுகள், அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பின்னரான நிலைமைகள், கனடா, புலம்பெயர் தமிழர்களால் தாயக பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

அத்துடன், வடக்குமாகாண சுகாதார சேவைகள் மேம்பாடு தொடர்பாகவும் குறிப்பாக கனடா நாட்டினால் மேற்கொள்ளப்படக்கூடிய அணுசரனை தொடர்பாகவும் ஆராயப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X