2020 மே 28, வியாழக்கிழமை

கேப்பாபுலவு முகாமில் மேலும் கடற்படையினர் அறுவருக்கு கொரோனா

Editorial   / 2020 மே 22 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த கடற்படையினரில் மேலும் அறுவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் (22) அவர்கள், சிகிச்சைக்காக வெலிகந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி விமானப் படைத்தளத்தில், நேற்று இருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஏனைய கடற்படை வீரர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே, மேலும் அறுவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X