2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொலிஸார் தாக்கிய சம்பவம்: ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன், சண்முகம் தவசீலன்

 

முல்லைத்தீவு - முள்ளிவாய்கால் பகுதியைச் சேர்ந்த மூவர் மீது முல்லைத்தீவு பொலிஸார் தாக்கிய சம்பவம் தொடர்பாக, வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இன்று (15) விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

மே 6ஆம் திகதி இரவு வேளையில், முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு ஆகிய பகுதிகளுக்குச் சென்ற முல்லைத்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள், நபரொருவருடைய பெயரைக் கேட்டு, அவர் எங்கே என்றும் அவரைக் கொண்டுவந்து உடனடியாக ஒப்படைக்குமாறும் தெரிவித்து, 3 பேர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர் சார்பில் வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாடு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, முல்லைத்தீவு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், பாதிக்கப்பட்டோர் சமூகமளித்திருந்தனர்.

இது தொடர்பான விசாரணை இன்றையதினம் இடம்பெற்று முற்றுப்பெறாத நிலையில், இரண்டாம் கட்ட விசாரணைக்காக மே 30ஆம் திகதியன்று, மீண்டும் சமூகமளிக்குமாறு, மனித உரிமைகள் ஆணையகத்தால் இருதரப்பினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .