2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’பிரிவினையை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும்’

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக பிரிவினையை ஏற்படுத்துவதைத் தடுக்க வேண்டியது ஆன்மீகத் தலைவர்களின் கடமையென, மன்னார் நகர சபை உறுப்பினர் செல்வக்குமரன் டிலான் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் 24ஆவது அமர்வு, சபை மண்டபத்த்லி,  நேற்று (20) முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், மன்னார் மாவட்டத்தில் இதுவரை காலமும் அரசியல் ரீதியாக எந்தப் பிரச்சினைகளும் ஏற்படவில்லையெனவும் இனியும் அவ்வாறான பிரச்சினைகள் நடக்க கூடாதெனவும் கூறினார்.

ஆன்மீகம் என்ற ரீதியில் அரசியல் செய்கின்றபோது, பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றனவெனத் தெரிவித்த அவர், அந்த வகையில், ஆன்மீகத் தலைவர்கள் சரியான முறையில் உணர்ந்து, மக்களுக்கும் மதங்களுக்கும் இடையில் குழப்பங்களை ஏற்படுத்தாத வகையில் நடந்து கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.

எனவே, ஆன்மீகத்தையும் அரசியலையும் வைத்து மக்களை குழப்பத்துக்கு உள்ளாக்காமல் செயற்பட வேண்டுமெனவும், செல்வக்குமரன் டிலான் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .