George / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
யாழ். பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தின் தொழிநுட்ப பீடத்தின் கற்கை நெறிகள் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில், ஏற்கெனவே விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன இயங்கி வருகின்ற நிலையில் தற்போது தொழிநுட்ப பீடமும் இயங்க ஆரம்பித்துள்ளது.
“நாடாளவிய ரீதியில் 23 மாவட்டங்களில் இருந்து 211 மாணவா்கள் இங்கு அனுமதி பெற்றுள்ளனா்” என யாழ் பல்கலைகழக துணைவேந்தா் வசந்தி அரசரட்ணம் குறிப்பிட்டாா்.
“அடுத்த வருடம் 525 மில்லியன் ரூபாய் செலவில் 400 ஏக்கா் கட்டடம் அமைக்கும் பணிகள் அரம்பிக்கப்படவுள்ளன. அதன் பணிகள் நிறைவடைந்ததும், இரண்டாம் வருட கற்கைகளை மாணவா்கள் இங்கு தொடரக் கூடியதாக இருக்கும்.
ஆண்,பெண்ளுக்கு இரண்டு விடுதிகள் காணப்படுகின்றன. மேலும், இரண்டு விடுதிகள் அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன” என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .