Editorial / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா – சிதம்பரபுரம், வன்னிகோட்டம் பகுதியில், இன்று (10) காலை இடம்பெற்ற விபத்தில், மாணவன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த புண்ணியகுமார் பகிரதன் (வயது 16) எனத் தெரிவித்த பொலிஸார், இவர் தற்போது இடம்பெற்றுகொண்டிருக்கும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியவரெனவும் கூறினர்.
வவுனியாவில் இருந்து சிதம்பரபுரம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
10 minute ago
42 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
42 minute ago
42 minute ago