2021 பெப்ரவரி 24, புதன்கிழமை

விவசாய காணியில் விளையாட்டு மைதானம்

Niroshini   / 2021 ஜனவரி 21 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

கற்சிலைமடு கிராம அலுவலகர் பிரிவில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக, 03 ஏக்கர் காணியை  பிரதேச சபையிடம் கையளிக்கத் தீர்மானித்துள்ளதாக,  பிரதேச செயலாளர் த.அகிலன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில், நேற்று முன்தினம் (20) நடைபெற்ற கூட்டத்தின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வந்த விவசாயி ஒருவர், இக்காணி தனக்குரிய காணி என கோரிக்கை விடுத்து, கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் காணிப் பிணக்கில் ஈடுட்டு வந்தார் என்றார்.

இந்நிலையில், குறித்த விவசாய காணியை விவசயாத்தின் முக்கியத்துவம் அறிந்த அரச நிர்வாகிகள், விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு தீர்மானித்துள்ளார்கள் எனவும், அவர் கூறினார்.

அத்துடன், குறித்த விவசாயிக்கு மாற்றுக்காணி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அகிலன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .