2021 மார்ச் 01, திங்கட்கிழமை

வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு தொற்று

Niroshini   / 2021 ஜனவரி 14 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-க. அகரன்

வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் இருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அண்மையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு, கொரொனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, அவருடன் தொடர்புகளை பேணிய சில ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு, பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, வைத்தியசாலையில் கடமையாற்றிய இரு ஊழியர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர்களுக்கு, நேற்று (13) முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலும், தொற்றுறுதி செய்யப்பட்டது.

வவுனியாவில், கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 148 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .