Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
A.P.Mathan / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் செட்டிகுளம் - ஆனந்தகுமாராமி மற்றும் கதிர்காமர் நிவாரண கிராமங்களுக்கு பௌஸர் மூலம் வழங்கப்படும் குடிநீரில் குளோரின் கலக்கப்பட்டு;ள்ளது என வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்தார்.
மழை காரணமாக நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரதுறையினர் தெரிவித்துள்ள ஆலோசணைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அரச அதிபர், நிவராண கிராமத்தில் உள்ள குழாய்க்கிணறு நீரை தற்காலிகமாக குடிக்கவேண்டாம் எனவும் சுத்தமான குளோரின் கலந்த குடிநீர் பௌவுசர் மூலம் வழங்கப்படுகின்றமையால் அதனையே பயன்படுத்தும்படியும் முகாமிலுள்ளவர்களை கேட்டுள்ளார்.
அத்துடன் மலசல கூட கழிவுகளை ஒழுங்கான முறையில் இயந்திரங்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும், மலசல கூடங்கள் நிரம்பி வழிய இடமளிக்காது அவதானிக்கவேண்டும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Jul 2025