Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் மூர்வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயதுடைய சிறுவனொருவன் பலியாகியுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
மன்னார் பள்ளிமுனை 49 வீட்டுத்திட்டம் கிராமத்தினைச் சேர்ந்த செபஸ்ரியான் அபிசேக் (வயது 07) என்ற சிறுவனே விபத்தில் பலியானவர் ஆவார்.
மன்னார் மூர்வீதியிலுள்ள நிறுவனமொன்றில் காவலாளியாக கடமையாற்றும் தந்தையுடன் குறித்த சிறுவன் தந்தையின் நிறுவனத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளான். மாலை 4 மணியளவில் நிறுவனத்திலிருந்து உணவு வேண்டுவதற்காக கடைக்குச் சென்ற குறித்த சிறுவன் மீது வைத்தியர் ஒருவரின் பிக்கப் ரக வாகனம் மோதியுள்ளது.
படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
சடலத்தை இன்று திங்கட்கிழமை பார்வையிட்ட மன்னார் நீதவான் கே.ஜீவராணி, பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
குறித்த வாகனத்தை செலுத்தி வந்த வைத்தியரை கைதுசெய்த பொலிஸார், மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .