2020 நவம்பர் 28, சனிக்கிழமை

மன்னார் மாவட்டத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: வைத்திய அத்தியட்சகர்

Super User   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்டத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த வருடம் ஒக்டேபர் மாதம் வரை 162 பேர் தற்கொலை செய்துள்ளதாக மன்னார் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.அசாத் தெரிவித்தார்.

இதேவேளைஇ குறித்த கால பகுதியில் 969 பேர் தற்கொலை செய்து கொள்ளுவதற்கு முயற்சித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில வருடங்களில் மன்னார் மாவட்டத்தில் தற்கொலை செய்வேரின் தொகை அதிகரித்து வருகின்றது. இது தொடர்பில் மன்னார் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் வைத்தியர் அசாத் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் தற்கொலை செய்த கொள்ளுவோரின் தொகை வருடா வருடம் அதிகரித்து வருகின்றது.

கடந்த வருடம் 188 பேர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். அவர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வருடம் ஜனவரி தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரையிலான கால பகுதியில் 166 பேர் தற்கொலை செய்த கொள்ள முயற்சி செய்துள்ளனர். இவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்கொலை செய்வேரில் அதிகமானோர் 14 வயது தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்களே. அத்துடன் திருமணமாகத பெண்களும் அதிகம்  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .