2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மன்னார் பனம்பொருள் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 09 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்ட பனம்பொருள் அபிவிருத்திச்சங்கத்தின் அங்கத்தவர்களுக்கான புதிய வீட்டுத்திட்டம் கையளிக்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை மன்னார் எழுத்தூர் தரகன்கோட்டை கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்திற்கு அருகில் நடைபெறவுள்ளது.

பனம்பொருள் அபிவிருத்திச்சங்கத்தால் ஒவ்வெரு வருடமும் 2 அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு புதிய வீடு அமைத்துக்கொடுப்பது வழமையாகும்.

இந்த வருடமும் 2 அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு வீடும் தலா 7 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

மன்னார் கிழக்கு பனை, தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் எம்.அருளப்பு தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.ஏ.சரத் ரவீந்திர கலந்துகொள்ளவுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .