2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

கேதீஸ்வரம் எலும்புக்கூடுகளின் பகுப்பாய்வுக்கு 27,000 அ.டொலர் செலவாகும்

Princiya Dixci   / 2015 ஜூலை 31 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மார்க் ஆனந்த் 

மன்னார் திருக்கோதீஸ்வர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை மேலதிக பகுப்பாய்வு செய்து அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிப்பதற்கு சுமார் 27 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதால் இந்நடவடிக்கையை நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர், மன்னார் மாவட்ட நீதிமன்றத்திடம் நேற்று வியாழக்கிழமை கோரினர். 

கடந்த 2013ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வரம் பகுதியில் குழாய்க் கிணறு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 83 மனித மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டன. 

இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப்புலனாய்வுப் பொலிஸார் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தனர். இதனையடுத்து, இது தொடர்பான அறிவித்தலை அடுத்த தவணையில் அறிவிப்பதாக கூறிய மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, வழக்கினை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X