2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

வெடுக்குநாறி கோவிலுக்கு செல்லத் தடை

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர்கோவிலுக்குச் செல்வதோ, பூசைகள் செய்வதோ முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் மீறி செயற்பட்டால் நிர்வாகத்தினர் கைதுசெய்யப்படுவார்களெனவும், நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளதாக, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோவில் வருடாந்த உற்சவம், நாளை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்,  அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன.

இந்நிலையிலேயே, இதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .