Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 09 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
1780: மேற்கிந்தியத் தீவுகளில் வீசிய சூறாவளியினால் 20000-30000 பேர் பலி.
1845: அமெரிக்க கடற்படை பயிற்சிக் கல்லூரி 50 மாணவர்கள் 7 பேராசிரியர்களுடன் செயற்படத் தொடங்கியது.
1913: அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்சன் பானமா கால்வாய் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
1933: அமெரிக்காவின் யுனைட்டெட் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானமொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டினால் தகர்க்கப்பட்டதால் 7 பேர் பலி. வர்த்தக விமானசேவை வரலாற்றின் முதல் விமானமொன்று நாசவேலை மூலம் தகர்க்கப்பட்டமை இதுவே முதல் தடவை.
1942: அவுஸ்திரேலியாவுடன் சோவியத் யூனியன் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்தது.
1944: நாஸிகளால் ஜிப்ஸி இன பிள்ளைகள் 800 பேர் கொல்லப்பட்டனர்.
1957: கானா நாட்டின் நிதியமைச்சருக்கு சேவைவழங்க டெலேவர் மாநில உணவு விடுதியொன்று மறுத்தமைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஐஸன்ஹோவர் மன்னிப்பு கோரினார்.
1964: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முதல் தடவையாக செய்தி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
1970: பிஜி சுதந்திர நாடாகியது.
1975: பப்புவா நியூகினியா ஐ.நா.வில் இணைந்தது.
1986: எல்சல்வடோரில் பூகம்பத்தினால் 1500 பேர் பலி.
1997: உருகுவேயில் விமானமொன்று வெடித்துச் சிதறியதில் 74 பேர் பலி.
1998: கொங்கோவில் விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டதால் 41 பேர் பலி.
2008: பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலொன்றில் 110 பேர் பலி.
2009: 200 வருடங்களாக தமது எல்லைகளை மூடிவைத்திருந்த ஆர்மேனியாவும் துருக்கியும் சுவிட்சர்லாந்தில் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டபின் தமது எல்லைகளை திறந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
1 hours ago