Janu / 2026 பெப்ரவரி 22 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊவா, பரணகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லூணுவத்தை பகுதியில் கராத்தே வகுப்பு நடத்திய கராத்தே மாஸ்டர் ஒருவர், பயிற்சிக்கு வந்த 13 வயது சிறுவனைப் பாரிய பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
54 வயதுடைய குறித்த கராத்தே மாஸ்டர் பல்வேறு பகுதிகளில் கராத்தே பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதுடன், அவர் ஒரு கருப்புப் பட்டி (Black Belt) தரநிலை கொண்டவராவார். அத்துடன் அவர் அகில இலங்கை ஷோடோகான் சங்கத்தின் தலைவர் எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவன் லூணுவத்தை, கினிகடுகல பகுதியில் நடைபெற்ற வகுப்பிற்கு வந்திருந்த போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக வெலிமடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவா பரணகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.
சுமனசிறி குணதிலக்க
15 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
38 minute ago
2 hours ago