S.Renuka / 2026 பெப்ரவரி 22 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் 2025.12.31 வரைக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டு 277,167 குடும்பங்களைச் சேர்ந்த 919,450 பேர் ஆரம்பக் கிராமங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
2026.01.01 ஆம் திகதிக்கு மேலும் குறித்த மாகாணங்களில் வீட்டு உரித்து இல்லாமல் இடம்பெயர்ந்துள்ள 13,069 குடும்பங்கள் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ள இரண்டு அங்கத்தவர்களைக் கொண்டவர்கள் அல்லது அதற்குக் குறைவான அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 340 சதுர அடி வீடொன்றை அமைப்பதற்கு 09 இலட்ச ரூபாய்களும், இரண்டு பேருக்கு அதிகமான அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 550 சதுர அடி வீட்டை அமைப்பதற்காக 15 இலட்ச ரூபாய்கள் நிதியுதவி வழங்குவதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இக்கருத்திட்டம் தொடர்பாக 2026.01.02 ஆம் திகதி ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில், பயனாளிகள் குறைந்தவருமானற் கொண்டவர்களாயிருத்தல் மற்றும் குறித்த கட்டுமானப் மூலப்பொருட்களின் செலவு மற்றும் தொழிலாளர் சம்பளம் அதிகரித்தமை போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு. உரிய தரத்துடன் வீடுகளை நிர்மாணிக்கக் கூடிய வகையில் தற்போது செலுத்தப்படும் நிதியுதவியை குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் 550 சதுர அடி வீட்டுக்கு 2026ஆம் ஆண்டு தொடக்கம் 2 மில்லியன் ரூபாய்களாக அதிகரிப்பது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, இக்கருத்திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் உதவித்தொகையை 02 மில்லியன்கள் வரைக்கும் அதிகரிப்பதற்காக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago