2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 18

Super User   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1797: பிரித்தானிய கப்பற் படையொன்றிடம் ட்ரினிடாட் சரணடைந்தது.

1901: வின்ஸ்டன் சர்ச்சில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக உரையாற்றினார்.

1911: உலகில் வான் வழி தபால்களுடன் உத்தியோகபூர்வமாக முதல் தடவையாக பறந்த நிகழ்வு இந்தியாவின் அலஹாபாத்தில் இம்பெற்றது. 

1930: விண்வெளியில் புளுட்டோ கண்டுபிடிக்கப்பட்டது.

1930: அமெரிக்காவைச் சேர்ந்த 'எல்ம் பாம் ஒல்லீ 'எனும் மாடு விமானத்தில் பறந்தது. உலகில் விமானத்தில் பறந்த முதல் மாடும் விமானத்தில் முதலில் பால் கறந்த மாடும் இதுவாகும்.

1965: பிரிட்டனிடமிருந்து காம்பியா சுதந்திரம் பெற்றது.

1969: அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 35 பேர் பலியாகினர்.

1979: அல்ஜீரியாவின் தென்பகுதியில் சஹாரா பாலைவனத்தில் பனி பொழிந்தது. அங்கு இத்தகைய நிகழ்வு இடம்பெற்றதாக பதிவு செய்யப்பட்ட ஒரேயொரு சந்தர்ப்பம்  இது.

2003: தென்கொரியாவில் சுரங்க ரயிலில் ஏற்பட்ட தீயினால் சுமார் 200 பேர் பலி.

2004: ஈரானில் கந்தகம், பெற்றோல், உரம் என்பவற்றை ஏற்றிச்சென்ற ரயில் தீப்பற்றியதால் 200 மீட்பு ஊழியர்கள் உட்பட 295 பேர் பலி.

2007: இந்தியாவில் ஹர்யானா மாநிலத்தில் ரயிலில் குண்டுவெடித்ததால் 68 பேர் பலி.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--