2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: நவம்பர் 19

Super User   / 2011 நவம்பர் 19 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 1941: இரண்டாம் உலக யுத்தத்தில் அவுஸ்திரேலிய கப்பலொன்றும் ஜேர்மனிய கப்பலொன்றும் ஒன்றையொன்று மூழ்கடித்ததால் 645 அவுஸ்திரேலியர்களும் 77 ஜேர்மனியர்களும் பலி.
 

1943: மேற்கு உக்ரேனில் நாஸி தடுப்பு முகாமிலிருந்து யூதர்கள் தப்பியோடும் முயற்சி தோல்வியுற்றபின் 6000 இற்கு மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர்.


1946: ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஐ.நாவில் இணைந்தன.
 

1969: சந்திரனுக்கு மனிதர்களை ஏற்றிச்சென்ற இரண்டாவது விண்கலம் (அப்பலோ 12 பயணம்) சந்திரனில் தரையிறங்கியது.


1969: பிரேஸில் கால்பந்தாட்ட வீரர் பேலே தனது 1000 ஆவது கோலை அடித்தார்.


1977: எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் இஸ்ரேலுக்கு விஜயம் செய்ததன் மூலம் அங்கு சென்று முதலாவது அரபு தலைவரானார்.


1977: போர்த்துக்கல் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 500 பேர் பலி.


1984: மெக்ஸிகோவில் எரிபொருள் களஞ்சியமொன்றில் தீவிபத்து ஏற்பட்டதால் சுமார் 500 பேர் பலி.


1985: அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றீகனும் சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவும் முதல் தடவையாக சந்தித்தனர்.
 

1988: அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனிடம் மோனிகா லூவின்ஸ்கி விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் குற்றவியல் விசாரணை ஆரம்பம்.

2005: மஹிந்த ராஜபக்ஷ முதல் தடவையாக இலங்கையின் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .