2021 மே 06, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 19

Super User   / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1881: ஜுலை 2 ஆம் திகதி துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் ஏ கார்பீல்ட் உயிரிழந்தார்.

1893: நியூஸிலாந்தின் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1944: சோவியத் யூனியன், பின்லாந்து நாடுகளுக்கிடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1946: கான்ஸ் திரைப்படவிழா முதல் தடவையாக நடத்தப்பட்டது.

1952: ஹொலிவூட் நகைச்சுவை நடிகர் சார்ளி சப்ளின் ஐரோப்பாவுக்கு சென்றபின் மீண்டும் அமெரிக்காவுக்கு வருவதை அமெரிக்க அரசாங்கம் தடுத்தது.

1976: துருக்கி விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 155  பேர் பலி.

1983: சென் கிட்ஸ் அன்ட் நேவிஸ் சுதந்திரம் பெற்றது.

1985: மெக்ஸிகோவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 10,000 பேர் பலி.

1989: நைகர் வான் பரப்பில் பறந்துகொண்டிருந்த விமானமொன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால் 171 பேர் பலி.

1997: அல்ஜீரிய நகரமொன்றில்  53 பொதுமக்கள் படுகnhலை செய்யப்பட்டனர்.

2006: தாய்லாந்தில் இராணுவத்தினர் புரட்சி நடத்தினர்.

2010: அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள பிரித்தானிய பெற்றோலிய எண்ணெய் அகழ்வு நிலையத்தில் பல வாரங்களாக தொடர்ந்த எண்ணெய்க் கசிவு அடைக்கப்பட்டது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .