2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 21

Super User   / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1512:  புரட்டஸ்தாந்து மத ஸ்தாபகர் மார்ட்டின் லூதர், ஜேர்மனியின் விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.

1520: பேர்டினான்ட் மகலன் தென் அமெரிக்காவில் அத்திலாந்திக் பசுபிக் சமுத்திரங்களை இணைக்கும் மகலன் நீரிணை என அறியப்பட்ட நீரிணையை கண்டுபிடித்தார்.

1805: நெப்போலிய யுத்தத்தில்,  ஆங்கிலேயே தளபதி நெல்சன் தலைமையிலான படைகள் பிரெஞ்சு, ஸ்பானிய கூட்டுப்படைகளை ஸ்பானிய கரையோரத்தில் தோற்கடித்தன.

1805: ஆஸ்திரிய ஜெனரல் மெக் தனது படைகளை நெப்போலியனின் படைகளிடம் சரணடையச்செய்தார். 30 அயிரம் படையினர் கைது செய்யப்பட்டனர்.

1816: மலேஷியாவின் பெனாங் ஜோர்ஜ் டவுனில் வண. ஹட்சிங்ஸினால் இலவச பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பழைமையான ஆங்கில மொழிப்பாடசாலை இதுவாகும்.

1824: போரட்லண்ட் சீமெந்துக்கு ஜோசப் அஸ்பிடின் காப்புரிமைசெய்தார்.

1854: புளோரன்ஸ் நைட்டிங்கேலும் மேலும் 38 தாதிகளும் கிறீமியன் யுத்த களத்திற்கு சேவைக்காக அனுப்பப்பட்டனர்.

1945: பிரான்ஸில்  பெண்களுக்கு  முதல்தடவையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

1959: விண்வெளிப்பயண முன்னோடியான வார்னர் வொன் பிரவுன் உட்பட ஜேர்மன் விஞ்ஞானிகள் பலர் அமெரிக்க இராணுவத்திலிருந்து நாஸா நிறுவனத்திற்கு ஜனாதிபதி டி.ஐஸனோவரினால் மாற்றப்பட்டனர்.

1933 லீக் ஒவ் நேசனிலிருந்து அடோல்வ் ஹிட்லர் தலைமையிலான ஜேர்மனி விலகியது.

1944: முதலாவது கமிகாஸ் தாக்குதல்: ஜப்பானிய விமானமொன்றின் மூலம் எச்.எம்.ஏ.எஸ். அவுஸ்திரேலியா கப்பல்;மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

1967: வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டனர்.

1969: சோமாலியாவில் இடம்பெற்ற சதிப்புரட்சியை அடுத்து சயீட் பாரே ஆட்சியைக் கைப்பற்றினார்.

1983: மீற்றர் அளவு, 7 ஆவது நிறுவை- அளவை மாநாட்டில் நிர்ணயம் செய்யப்பட்டது. வெற்றிடத்தில் 1/299,792,458  பங்கு விநாடியில் ஒளி பயணம் செய்யும் தூரமே ஒரு மீற்றர் என அங்கீகரிக்கப்பட்டது.

1987: யாழ் வைத்தியசாலையில் இந்திய அமைதிப் படையினரால் 70 தமிழ்பொதுமக்கள், மருத்துவர்கள், தாதிகள், ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1994: வடகொரியா, அணுவாயுத சோதனைகளை நிறுத்துவத்றகும் தனது அணுசக்தித் திட்டங்களை பார்வையிடப்படுவதற்கும் இணங்கி, அமெரிக்காவுடன் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டது.

1994: தென்கொரியாவின் சியோல் நகரில் பாலமொன்று இடிந்து வீழ்ந்து 32 பேர் பலி.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X