2021 ஜனவரி 27, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 24

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1294: பாப்பரசர் பதவியிலிருந்து 5 ஆம் புனித செலஸ்டின் ராஜினாமா செய்ததால் 8 ஆம் பொனிபேஸ் பாப்பரசராக தெரிவானார்.

1906: முதலாவது வானொலி ஒலிபரப்பை கனடாவைச் சேர்ந்த ரெஜினோல்ட் பெஸென்டென் நிகழ்த்தினார். கவிதையொன்றும் வயலின் இசையொன்றும் உரையொன்றும் ஒலிபரப்பப்பட்டது.

1914: முதலாம் உலக யுத்தத்தில் நத்தார் போர்நிறுத்தம் ஆரம்பமாகியது.

1914 அல்பேனியா சுதந்திரம் பெற்றது.

1929: ஆர்ஜென்டீன ஜனாதிபதி ஹிபோலிட்டோ யிரிகோயெனை படுகொலை செய்ய முயற்சிக்கப்பட்டது.

1951: இத்தாலியிடமிருந்து லிபியா சுதந்திரம் பெற்றது. முதலாம் இத்ரிஸ் மன்னராக பதவியேற்றார்.

1966: அமெரிக்க இராணுவத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கனடா எயார் விமானமொன்று தென் வியட்நாமில் விபத்துக்குள்ளாகி 129 பேர் பலி.

1968: அப்பலோ 8 விண்வெளிப் பயணத்தின் மூலம் மனிதர்கள் முதல் தடவையாக சந்திரனை சுற்றிவந்தனர். 10 தடவை அவர்கள் சந்திரனை வலம் வந்தனர்.

1979: ஐரோப்பாவின் முதலாவது ரொக்கட்டான ஆரியன் ஏவப்பட்டது.

1997: அல்ஜீரியாவில் கலவரங்களால் 50-100 பேர் படுகொலை.

2005 சூடானுக்கு எதிராக சாட் குடியரசு யுத்தப் பிரகடனம் செய்தது.

2008: உகண்டாவின்கிளர்ச்சிக் குழுவொன்று கொங்கோவில் 400 பேரை படுகொலை செய்ததன் மூலம் கொங்கோவுக்கு எதிராக தொடர் தாக்குதல்களை ஆரம்பித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .