2021 மே 15, சனிக்கிழமை

செப்டெம்பர் 27

Super User   / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

1290: சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் ஒரு லட்சம் பேர் பலி.

1590: பாப்பரசராக தெரிவு செய்யப்பட்டு 13 நாட்களில் 7ஆம் ஆர்பன் மரணம்.

1821: ஸ்பெய்னிடமிருந்து மெக்ஸிகோ சுதந்திரம் பெற்றது.

1928: சீனக் குடியரசு அமெரிக்காவினால் அங்கீகரிக்கப்பட்டது.

1940: இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையில் 'முச்சக்தி ஒப்பந்தம்' பேர்லின் நகரில் கையெழுத்திடப்பட்டது.

1943: ஜேர்மனியில் அமெரிக்காவின் முதலாவது விமான தாக்குதல் இடம்பெற்றது.

1959: ஜப்பானின் ஹொன்ஸு தீவில் வீசிய சூறாவளியினால் சுமார் 5,000 பேர் மரணம்.

1970: ஜோர்டானில் அந்நாட்டுப் படைகளுக்கும் பலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஜோர்தான் மன்னர் ஹுஸைனும் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யஸீர் அரபாத்தும் சமாதான உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டனர்.

1988: சியோல் ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற பென் ஜோன்ஸன், ஊக்கமருந்து சோதனையில் வெற்றி பெறத் தவறியதால் அவரின் பதக்கம் பறிக்கப்பட்டது.

1996 : 3 பல நாட்கள் நடந்த கடும் சண்டையின் பின் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைபற்றினர்.

1998: உலகின் மிகப்பெரிய இணைய தேடல் தளமான கூகுள் ஆரம்பிக்கப்பட்டது.

2002: கிழக்கு திமோர் ஐ.நா.வில் இணைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .