2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

இந்தவார பலன்கள் (03.04.2011 - 09.04.2011)

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (03.04.2011 - 09.04.2011)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

கலையான தோற்றமும் கவலைக்கு முதலிடம் கொடுக்காது பகிர்ந்து வாழும் எண்ணம் கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் நீங்கள் எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகளை கேள்விபடுவீர்கள். ஆரோக்கியமான ஆகாரம் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் உதவியுடன் நவீன தொழில்நுட்பங்களை கையாளலாம். குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தேவையற்ற மனகவலைகளினால் உடல் சோர்வடையும். நீண்டநாள் தடைப்பட்டிருந்த வேலைகளை உடனுக்குடன் முடிக்கலாம். நண்பர்களுடன் இணைந்து புதிய முயற்ச்சிகளில் ஈடுபடுதல். மாணவர்கள் கல்வியில் நவீன சாதனைகளினால் வெற்றி காண்பார்கள். அனாவசிய பிரச்சினைகளில் தலையிடுவதால் அது சிக்கலை, கஷ்டத்தை ஏற்படுத்தும். வார இறுதியில் கவலைகளை மறந்து உற்சாகத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 07
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா




கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மென்மையாக பழகும் உள்ளம் படைத்த இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தொடக்கத்தில் வியாபாரத்தில் திட்டமிட்டபடி நவீன வேலைப்பணிகளை மேற்கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்க கூடும். இசையில் அதிக நேரத்தை செலவிடுவதால் மனஅமைதி கிடைக்கும். ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல். குடும்பத்தில் பெண்களுடன் அனுசரித்து நடப்பதால் நன்மதிப்பை பெற்றுகொள்ளலாம். நல்ல நண்பர்களின் ஆலோசனைகள் நம்பிக்கை தரும். தொலைதூர பயணங்கள் செல்வதன் மூலம் நெருங்கிய உறவினர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டும். கேட்பார் பேச்சை கேட்டு பிறரின் பிரச்சினைகளை வாதிடுவதை தவிர்க்கவும். வார இறுதியில் நம் வாழ்க்கையில் இன்ப துன்பங்களின்போது இறைவனை மறவாது இறைவனுக்கு முதலிடம் அளிப்பது சிறந்த ஒன்றாகும்.

அதிர்ஷ்ட திகதி: 03
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எல்லா உயிர்களை நேசித்து வாழும், மலர் போன்ற மென்மையான குணம் படைத்த மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு உற்சாகத்துடன் புதிய காரியங்களை தொடங்கலாம். தொழிலில் ஏற்பட்ட மந்தநிலை மாறி நன்னிலை தோன்றும். உத்தியோகத்தர்களுக்கு மேல் அதிகாரிகளினால் உதவிகள் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் விசேஷங்கள் நடைபெறும். நண்பர்களுடன் சுற்றுலா பயணங்கள் செல்லும்போது கவனம் தேவை. அறுசுவையான உணவு உண்ணலாம். பணப் பிரச்சினைகளின்போது பிறரின் உதவியை நாடுவதனால் அது சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே வரவுக்கேற்ற செலவுகளை மேற்கொள்வது நல்லது. வார இறுதியில் எதிர்பாராத புதிய செய்திகள் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 06
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

தன் கையே தனக்கு பலம் என்ற கருத்துக்கு ஒரு விதிவிலக்காக விளங்கும் தன்னபிக்கை அதிகம் உள்ள கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை மகிழ்ச்சியும் ஒற்றுமையும் ஏற்படுத்தும். அரசாங்க தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள சிறு அலைச்சல்களை மேற்கொள்ளநேரிடும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள். மனசஞ்சலங்கள் தோன்றும்போது பிரார்த்தனைகள், தியானங்கள் செய்வதனால் உற்சாகம் கிடைக்கும். தூய்மையான ஆடைகளை அணியலாம். காணமல்போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. மாணவர்கள் கல்வியில் புதிய சாதனைகளை செயல்படுத்தல், வார இறுதியில் இனிமையான தூக்கம் மனநிறை தரும்.  

அதிர்ஷ்ட திகதி: 03
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

பிறரிடம் மனம்விட்டு பேசி பழகும் குணமும் அதிகார தன்மையும், யாரிடமும் தாழ்ந்து செல்லாத துணிவும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு கடினமான காரியங்களை எளிதாக முடிக்கக்கூடியதாயிருக்கும். பகைவர்களுடன் ஏற்படும் பிரச்சினைகளை நிதானமாக பேசி தீர்ப்பது நன்று. நன்மையான காரியங்கள் மனதுக்கு திருப்தி தரக்கூடும். குடும்பத்தில் பெண்களுடன் விட்டுக்கொடுத்து செல்வதனால் மனசங்கடங்களை தவிர்த்துக்கொள்ளலாம். அவசியமற்ற செலவுகளினால் பணதட்டுபாடுகள் ஏற்படும். பணம் சம்பாதிப்பதில் கடின உழைப்பு தேவை. வியாபாரத்தில் மேல் அதிகாரிகளுடன் இணைந்து புதிய வேலைத் திட்டங்களை நடைமுறைபடுத்தலாம், இதனால் பணவரவு ஏற்படும். விநோத விளையாட்டுக்களில் மகழ்ச்சியுடன் ஈடுபடலாம். வார இறுதியில் பிறரை நம்பி எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மைக்கே.

அதிர்ஷ்ட திகதி: 05
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: பெருமாள்


சந்திராஷ்டமம்:
ஏப்;ரல் 01ஆம் திகதி காலை 04.23 மணியிலிருந்து ஏப்ரல் 04ஆம் திகதி மாலை 04.58 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எந்த விடயத்தையும் அமைதியுடனும் பொறுப்புடனும் செய்து முடிக்கும், காரணமின்றி பேசாத கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தாருடன் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதால் கவலைகள் நீங்கி மனஅமைதி கிடைக்கும். பெண்களுடன் நிதானமான பேச்சுவார்த்தைகளை கடைப்பிடிக்கவும். வியாபார உத்தியோகத்தர்கள் புதிய வேலைத் திட்டங்களை கையாண்டு ஆதாயம் அடைவார்கள். எதிர்பாராத புதிய செய்திகள் திடீர் பயணத்தை ஏற்படுத்த கூடும். வரவுக்கேற்ற செலவுகளை கையாளவும். பல நவீன சாதனைகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். அதிகார பதவியில் இருப்பவர்களினால் அனுகூலம் உண்டு. தேவையற்ற பிரச்சினைகளினால் மனதில் வெறுப்பு தன்மை தோன்றும். ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல். வார இறுதியில் நல்ல நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 04
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


சந்திராஷ்டமம்:
ஏப்ரல் 04ஆம் திகதி மாலை 04.58 மணியிலிருந்து ஏப்ரல் 06ஆம் திகதி காலை 04.50 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.




சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

தேடி சென்றும் உதவிடும் குணமும் முடிவுகளை பாராது முன்னேற்றத்திற்காக முழுமூச்சாக செயல்படும் துலா ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நினைத்த காரியத்தை சாதித்து வெற்றியை அடையலாம். திருட்டுக்கள் ஏற்படவாய்ப்புண்டு, அவதானம் தேவை. ஒவ்வாத உணவினால் அஜீரண கோளாறுகள் ஏற்படும், ஆரோக்கியமான உணவுகளை உண்ணவும். சில புதிய தொழில் மாற்றங்கள் லாபகரமாக அமையகூடும். பெண்களுக்கு புதிய ஆடை, அணிகலன்கள் பரிசாக கிடைக்கும். தொலைந்த பொருளை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். இசைதுறையில் அதிக கவனம் செலுத்துவதால் மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். நவீன வேலைத்திட்டங்களுக்காக வெளிபிரயாணங்கள் செல்லநேரிடும். இதுவரை இருந்த கவலைகளை மறந்து இவ்வார நாட்களை நன்நாளாக கடைப்பிடிக்கவும்.

அதிர்ஷ்ட திகதி:
அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன் (சந்திரன்)


சந்திராஷ்டமம்:
ஏப்ரல் 06ஆம் திகதி காலை 04.50 மணியிலிருந்து ஏப்ரல் 09ஆம் திகதி மாலை 02.59 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.



விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடையவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல்பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நல்ல தொழில் வாய்ப்புக்களை அரசாங்க ஊழியர்களின் உதவியுடன் பெற்றுகொள்ளலாம். வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றமும் லாபமும் காணப்படும். குடும்பத்தில் பெண்கள் தமது பணிகளை அக்கறையுடன் செய்வார்கள். செயல்களில் பதற்றநிலை ஏற்படக்கூடும், மனம் தளராது செயல்படவும். தீய நண்பர்களுடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும். வெண்மையான ஆடைகளை அணியலாம். தொலைதூர பயணங்கள் அலைச்சலை தரக்கூடும். புதிய காரியங்களில் சிறு தடைகள், தோல்விகள் ஏற்பட்டு நீங்கும். வார இறுதியில் இறைவனை இடைவிடாது பிரார்திப்பதால் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்கள் மறையும்.

அதிர்ஷ்ட திகதி: 09
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டும் உள்ளமும் தீமைகளை கண்டு விலகி செல்லும் பக்குவமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறக்கூடும். அறுசுவையான உணவுகளை உண்ணலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது பணதட்டுபாடுகள் ஏற்படக்கூடும். பணம் சேமிப்பதில் அதிக ஊக்கம் தேவை. நெருங்கிய உறவினர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் வந்து சேரும். நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். தொடங்கிய காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தொழில் ஸ்தானத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கக்கூடும். வார இறுதியில் வாழ்வில் பல வாய்ப்புக்கள் தவறவிடாது அதை சரியான முறையில் பயன்படுத்தவும்.

அதிர்ஷ்ட திகதி: 03
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் இறைவனுக்கு முதலிடம் அளிக்கும் மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு வெளிதேச பயணங்கள் செல்வதனால் நன்மைகள் ஏற்படக்கூடும். சில இடமாற்றங்களுக்கு வழியுண்டு. வேண்டாத மனக்கவலைகளினால் சாப்பாட்டில் வெறுப்பு தன்மை ஏற்படும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். புதிய வேலைத்திட்டங்களை தொடங்கும்போது உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் பயனுள்ளதாக அமையும். குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை குதூகலத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். அரசாங்க ஊழியர்களின் நட்புறவை வைத்துகொள்வது நன்மைக்கே. பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும். இனிமையான உறக்கம் நிறைவாக கிடைக்கும். வார இறுதியில் நீண்டநாள் பிரார்த்தனையின் பலனாக மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிட்டும்.

அதிர்ஷ்ட திகதி: 03
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பட்டுதுணி
அதிர்ஷ்ட தெய்வம்: குருபகவான்




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எதற்கும் தளராத நெஞ்சமும் ஆடம்பரமின்றி வாழ விரும்பும் வக்குவான்மையும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நீண்டநாள் எதிர்பார்த்த நண்பர்களின் சந்திப்புக்கள் கிடைக்ககூடும். தேவையற்ற பிரச்சினைகள் தேடிவந்தாலும் நாவடக்கத்துடன் செயல்படவும். மனதில் சிறு பதற்றம், சஞ்சலங்கள் தோன்றி மறையும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதால் நன்மைகள் உண்டாகும். பெரியார்கள் வழங்கும் அறிவுரைகளை கேட்டு நடப்பதால் மேன்மை அடையலாம். பண விடயங்களில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் உரிய நேரத்தில் வந்து சேரும். விநோத விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. குடும்பத்தில் சுபவிசேஷங்கள் மகிழ்ச்சியை தரும், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வார இறுதியில் நன்மையானதை மட்டு சிந்தித்து செயல்படுவதால் வாழ்க்கை இன்பம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 07
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
அதிர்ஷ்ட தெய்வம்: பிரம்மா




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

வாழ்க்கையில் பல கஷ்டங்களை உறுதியாக நீந்தி கடந்து செல்லும் உப்பை போன்று உறையாத உள்ளம் பெற்ற மீன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு செயல்களில் சுறுசுறுப்பும் உற்சாகமும் காணப்படும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பொருள் சேர்க்கை ஏற்படக்கூடும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். வீடு அல்லது காணி சம்பந்தமான இடமாற்றங்களுக்கு வழியுண்டு. வியாபாரத்தில் புதிய வேலைகளை தொடங்கக்கூடியதாயிருக்கும். விநோதங்கள் விபரிதத்தை ஏற்படாத வண்ணம் செயல்படவும். அரசாங்க உத்தியோகத்தர்களின் நல்லுறவை ஏற்படுத்திகொள்ளவும். நீண்டநாள் பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேருதல். வார இறுதியில் பெரியார்களின் அறிவுரைகளை கேட்டு நடப்பதால் வாழ்க்கை நற்பண்புகளை கற்றுக்கொள்ளலாம்.

அதிர்ஷ்ட திகதி: 09
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: பார்வதி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .