2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

இந்தவார பலன்கள் (07.11.2010 – 13.11.2010)

A.P.Mathan   / 2010 நவம்பர் 06 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (07.11.2010 – 13.11.2010)  


மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

செயலில் வேகமும் சுறுசுறுப்பும் கொண்ட, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக செயல்படும் மேட ராசி அன்பர்களே..!

இந்தவார தொடக்கத்தில் மனதில் கவலைகள் மறைந்து உற்சாகத்துடன் பணிகளை  மேற்கொள்வீர்கள். அரசாங்கத்தினால் சில சலுகை தேடிவரக்கூடும். வியாபார நிலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும், இதனால் பணவரவு அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் பெண்களின் அன்பும் அதிகரிப்பதுடன் சுபகாரியங்களும் நடைபெறும். நன்மையான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் ஆன்மீக தெளிவுகள் உருவாகும். நண்பர்களுடன் வெளி பிரயாணங்களில் ஈடுபடுவதனால் அனுகூலம். திடீர் அதிர்ஷ்டங்களினால் சொத்துக்கள் சேர வாய்ப்புண்டு. இசை துறையில் அதிக நாட்டத்தை செலுத்துதல். வார இறுதியில் வாழ்வில் துயரங்கள் நீங்கி வளமுடன் வாழ வழி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் பச்சை
வழிபாடு: சிவன் (சந்திரன்)

சந்திராஷ்டமம்:
நவம்பர் 07ஆம் திகதி காலை 03.31 மணியிலிருந்து நவம்பர் 09ஆம் திகதி காலை 07.58 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


இடபம்
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

சொற்களால் பிறரை கவரும் திறனும் விட்டுகொடுத்து செல்லும் பண்பும் கொண்ட இடப ராசி அன்பர்களே..!

இந்தவார தொடக்கத்தில் பொழுதுபோக்குக்காக அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். புதிய திட்டங்களை செயல்படுத்த அரசாங்க சம்பந்தப்பட்ட உதவிகள் உங்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லக்கூடும். தொழிலில் நவீன சாதனங்களை கொண்டு ஆதாயம் அடையலாம். குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை ஏற்படக்கூடும், மேலும் பெண்களின் கனிவான அனுசரிப்புக்கள் மகிழ்ச்சியை தரும். அழகிய ஆடை- ஆபரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும். சில நோய் அறிகுறிகள் உடலை பாதிக்கும், ஆரோக்கியமான உணவுகளை உண்ணவும். நண்பர்களுடன் ஒன்றுபட்டு செயல்களில் ஈடுபடுவதன் மூலம் வெற்றி தோல்விகள் எளிதாகும். வார இறுதியில் மனதில் சங்கடம் மறைந்து புத்துணர்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட திகதி: 08
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்   
வழிபாடு: நவகிரகம்

சந்திராஷ்டமம்:
நவம்பர் 09ஆம் திகதி காலை 07.58 மணியிலிருந்து நவம்பர் 11ஆம் திகதி மாலை 04.07 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


மிதுனம்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்.

எல்லோரையும் புரிந்து நடந்து கொள்ளும் பக்குவமும் நுணுக்கமாக சிந்திக்கும் மிதுன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் வியாபாரத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வதனால் அனுகூலம். பணவரவுகள் எதிர்பார்த்தபடி அமையாது, பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் செலுத்தவும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது அவதானம் தேவை. குடும்ப உறவினர்களுடன் ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடுவதன் மூலம் நன்மையான வழி கிடைக்கும். நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும். நீண்ட நாட்களின் பின் இன்பகரமான செய்திகளை கேள்விப்படுவீர்கள். வெளிபிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்க கூடும். நவீன  திட்டங்களை மேம்படுத்த அரசங்க உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. வார இறுதியில் இறை சித்தபடி நீண்ட நாள் பிரச்சினைகள் தீர்வுபெற்று நன்மை கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 07
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு   
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்:
நவம்பர் 11ஆம் திகதி மாலை 04.07 மணியிலிருந்து நவம்பர் 13ஆம் திகதி காலை 03.32 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


கடகம்  
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

வெற்றி தோல்விகளை சாதாரணமாக ஏற்று கொள்ளும் மனமும் தேடி சென்று உதவிடும் குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் உடலுக்கு ஒவ்வாத உணவினால் உடல் உபாதைகளை எதிர்நோக்க நேரிடும். அதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களுக்கு இடமுண்டு. வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். வியாபார திட்டங்களில் கவனகுறைவு ஏற்படுவதுடன்  அதிக அலைச்சல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தில் பெண்களின் அனுசரிப்பினால் புதிய திருப்புமுனை ஏற்படும். மேலும் உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்க கூடும். நீண்ட நாட்களின் பின் காணாமல்போன பொருள் கிடைக்க வாய்ப்புண்டு. இந்த வார இறுதியில் பெரிய மனிதர்களின் நற்பண்புகள் உள்ளத்தில் நம்பிக்கையும் புதிய வழியையும் காட்டும்.

அதிர்ஷ்ட திகதி: 08
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்   
வழிபாடு: நவகிரகம்

சந்திராஷ்டமம்:
நவம்பர் 13ஆம் திகதி காலை 03.32 மணியிலிருந்து நவம்பர் 16ஆம் திகதி மாலை 04.11 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

சிம்மம்
மகம், பூரம்;, உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அதிக அன்பை வெளிகாட்டாத குணமும் எந்த முயற்சியிலும் தனித்து செயல்படும் ஆற்றலும் உள்ள சிம்ம ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் எதிர்பாராத இன்பகரமான செய்திகளை கேள்விப்படுவீர்கள். குடும்பத்தில் பெண்களின் உதவி சிறப்பாக காணப்படும். புதிய வேலை திட்டங்களின்போது இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். தொழிலில் முன்னேற்றத்திற்கு சக ஊழியர்களுடன் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயல்படுதல். ஆரோக்கியமற்ற உணவினால் உஷ்ண சம்பதமான நோய்கள் ஏற்படக்கூடும். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வதால் அனுகூலம். ஆச்சரிய பொருள் காணக்கிடைத்தல். நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது அவதானம் தேவை. நிம்மதியான நித்திரை கிடைக்கும். வார இறுதியில் திடீர் பிரயாணங்கள் செல்வதனால் புதிய வழி கிடைக்கும்.   

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

 

கன்னி
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

ஏழை பணக்காரர் என்று பாகுபாடு இல்லாமல் பழகும், அறிவுபூர்வமாக சிந்திக்கும் கன்னி ராசி அன்பர்களே..!

இந்த வார தொடக்கத்தில் நீண்ட நாட்களின் பின் தொலைந்த பொருள் கிடைக்க கூடும். பெண்களுடன் அனாவசிய பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும். குடும்பத்தில் துன்பங்கள் மறைந்து அமைதியான சூழல் ஏற்படும். இசை துறையில் மனதை ஈடுபடுத்துவதனால் அமைதி கிடைக்கும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்ககூடும். வியாபாரத்தில் நவீன தொடர்புகள் நடைமுறைபடுத்திவீர்கள், இதனால் பணவரவு கூடும். சில மனபயங்கள் தோன்றி மறையும். விநோத விளையாட்டுகளுக்காக அதிக செலவுகள் ஏற்படும். சேமிப்பை கடைப்பிடிக்கவும். வார இறுதியில் இறைவன் திருவருளால் சாதுக்களின் தரிசனம் கிடைக்க வாய்ப்புண்டு.  

அதிர்ஷ்ட திகதி: 09
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்   
வழிபாடு: பெருமாள்

 

துலாம்
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள். துன்பங்களின்போது துவளாமல் மனதில் பட்டதை எந்த ஒளிவு மறைவுமின்றி பேசும் துலாம் ராசி அன்பர்களே..!

இந்த வார தொடக்கத்தில் வியாபார விருத்திற்காக அரச ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்க கூடும். குடும்பத்தில் சொந்த பந்தங்களின் வருகையினால் குதூகலம் ஏற்படும், மேலும் பெண்களின் அன்பும் அக்கறையும் அதிகரிக்க கூடும். நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை செயல்படுத்த பிறரின் உதவி நாடவேண்டிய சூழ்நிலை ஏற்பட கூடும், சிந்தித்து செயல்படவும். பணவரவுகள் எதிர்பார்தபடி அமையாது, பணம் சம்பாதிப்பதில் அதிக அக்கறை செலுத்தவும். புதிய நட்புக்கள் நம்பிக்கை தரகூடும். மேல் அதிகாரிகளுடன் வேண்டாத வாக்குவாதங்களினால் சங்கடங்கள் ஏற்படும், வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். வார இறுதியில் சிக்கல்கள் சீர்திருத்தம் பெற்று உற்சாகம் ஏற்படும்.  

அதிர்ஷ்ட திகதி: 09
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்   
வழிபாடு: பெருமாள்விருட்சிகம்
விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் பழகும் குணமும் உள்ளத்தில் இறைவனுக்கு முதலிடம் கொடுக்கும் விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்த வார தொடக்கத்தில் புதுமையான பொருட்களை காண்பீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது பகைவர்களினால் சில சிக்கல்கள் உருவாகக்கூடும். முன்யோசனையுடன் செயல்படவும். குடும்பத்தில் உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வியாபார விரித்திற்காக அதிக அலைச்சல்கள் ஏற்படக்கூடும். சாப்பாட்டில் வெறுப்பு தன்மையினால் உடல் உபாதைகள் ஏற்படும், தேக சுகத்தில் அக்கறை செலுத்தவும். பெண்களுடன் கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, நாவடக்கம் அவசியம். பெரிய மனிதர்களின் ஆலோசனை மனதிருப்தியை தரும். வார இறுதியில் நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடன் செயல்படுவதனால் வாழ்வில் கவலைகள் மறையும்.

அதிர்ஷ்ட திகதி: 12
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்தனுசு
மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தனக்கு தீங்கு செய்பவர்களை அனுசரித்து செல்வீர்கள், பொறுமைக்கு பெருமை சேர்க்கும் தனசு ராசி அன்பர்களே..!

இந்த வார தொடக்கத்தில் அயராத உழைப்பினால் நிறைவான ஆதாயத்தை பெற்றுக்கொள்ளலாம். வெளிபிரயாணங்களின் போது பிறர் மூலம் உதவிகள் கிடைக்க கூடும். குடும்பத்தாருடன் பொழுதுபோக்குகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும், இதனால் சுபசெலவுகள் ஏற்படும். நட்பு வட்டம் விரிவடையும். அறுசுவை உணவுகள் கிடைக்கக் கூடும். வியாபாரத்தில் நவீன வழிமுறைகளை பின்பற்றுவதால் பணவரவு அதிகரிக்கும். அழகிய ஆடை - ஆபரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும். அரசதுறையிலிருந்து சலுகை கிடைக்க வாய்ப்புண்டு. வார இறுதியில் அன்றாட வேலைகளை உடக்குடன் முடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். நிம்மதியான உறக்கம் மனதிலும் உடலிலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 08
அதிர்ஷ்ட நிறம்: சாம்பள், நீலம்   
வழிபாடு: நவகிரகம்மகரம்
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

வாழ்வில் தோல்விகளை கண்டு எதிர் நீச்சல் போட கூடிய தன்னம்பிக்கை கொண்ட மகர ராசி அன்பர்களே..!

இந்த வார தொடக்கத்தில் எதிர்பாராத புதிய செய்திகள் வாழ்வை இன்பகரமாக மாற்ற கூடும். விசித்திரதமான பொருட்களை காணுவதன் மூலம் மனதில் உற்சாகம் கிடைக்கும். தொழில் புதிய வேலை திட்டங்களுக்கு நண்பர்களின் உதவிகள் பக்கபலமாக இருக்க கூடும். உழைப்புக்கேற்ற ஊதியங்களை உடனுக்குடன் பெறுவீர்கள். பகைவர்களின் பிரச்சினைகளிருந்து விலகி நிற்பது நல்லது. குடும்பத்தில் பெண்களினால் சுபகாரியங்கள் நடைபெறக்கூடும். விநோத விளையாட்டுகளின்போது தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். வார இறுதியில் மனதில் நன்மையை மட்டும் சிந்திப்பதால் வாழ்வில் துயரங்கள் துவண்டுவிடும்.

அதிர்ஷ்ட திகதி: 08
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்   
வழிபாடு: நவகிரகம்கும்பம்
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தொடங்கும் காரியங்களை அலசி ஆராய்ந்து செயல்படும் புத்திகூர்மை கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

இந்த வார தொடக்கத்தில் குடும்ப உறவினர்களுடன் சுற்றுலா பயணங்கள் செல்வதனால் அனுகூலம். பெண்களினால் அனுசரிப்புகள் அதிகரிப்பதுடன் நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கக்கூடும். தொழில் புதிய வாய்ப்புக்களினால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். இசையில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும், இதனால் மனநிறை ஏற்படும். திடீர் பிரயாணங்களை மேற்கொள்வதனால் அதிர்ஷ்டம் ஏற்படக்கூடும். தொழிலில் மந்தநிலை மாறி ஏற்றம் பெறும். நீண்ட நாட்களின் பலனாக சாதுக்களின் தரிசனம் கிடைக்க வாய்ப்புண்டு. வார இறுதியில் அன்றாட பணிகளை உற்சாகத்துடன் தொடங்கலாம்.  

அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சிவப்பு  
வழிபாடு: சிவன் (சந்திரன்)மீனம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

ஒரு கை செய்த உதவி மறு கை அறியாது செயல்படும் தன்னம்பிக்கை அதிகம் கொண்ட மீன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் மனதில் பயம் உணர்வுகள் தோன்றி மறையும். மேலதிகாரிகளின் சங்கடத்துகுரிய செயல்கள் ஏற்படக்கூடும், அவதானத்துடன் செயல்படவும். மற்றவர்களின் பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும். நவீன திட்டங்களை நடைமுறைபடுத்த அரச உதவிகள் தேடி வரகூடும். பெண்களுடன் வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். தொழில் விரித்திற்காக அதிக அலைச்சல்களை மேற்கொள்ள வேண்டிருக்கும். நண்பர்களுடன் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதனால் அதிக செலவுகள் ஏற்படும். வார இறுதியில் மனநிறைவோடு இறைவனை தரிசிப்பதால் சிக்கல்கள் விலகும்.   

அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்   
வழிபாடு: சிவன் (சூரியன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .