2021 மார்ச் 08, திங்கட்கிழமை

இந்தவார பலன்கள் (10.10.2010 – 16.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (10.10.2010 – 16.10.2010)

 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அதிகாரமும் ஆணவமும் கண்டு அஞ்சாமல், அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் மேட ராசி அன்பர்களே..!

இந்த வாரம் குடும்பத்தில் சகோதரர், சகோதரிகளின் நல்லுறவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய தொழில் வேலைப்பாடுகளை தொடங்குவதற்கு அரசாங்கத்தில் சில சலுகைகள் கிடைக்கக்கூடும். புதிய காரியங்களை நடைமுறைப்படுத்துவீர்கள், இதனால் மனதிருப்தி ஏற்படும். நண்பர்களின் சேர்க்கை அதிகரிப்பதுடன் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். பயணங்கள் செல்ல வாய்ப்புக்கள் கிடைப்பதுடன் அதன் மூலம் லாபத்தை பெற்றுக்கொள்ளலாம். உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் சிலரை பாதிக்கலாம், தேக சுகத்தில் அதிக அக்கறை செலுத்தவும். அதிகாரிகளுடன் சில மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். இசைதுறையில் அதிக ஆர்வம் செலத்துவீர்கள். நல்லுறக்கம் கிடைக்கும். எதிர்காலம் வளம்பெற பெரிய மனிதர்களின் ஆசிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்:  பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

சந்திராஷ்டமம்
ஒக்டோபர் 10ஆம் திகதி மாலை 05.06 மணியிலிருந்து ஒக்டோபர் 12ஆம் திகதி மாலை 10.22 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

சாதுவாக இருக்கும் நீங்கள் யாராவது சீண்டினால் சீறிப் பாய்வீர்கள். மனித நேயம் அதிகமுள்ள இடப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் மேலதிகாரிகளுடன் சில பிரச்சினைகள் உருவாக கூடும், பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் பெண்களிடமிருந்து உபசரிப்புக்கள் கிடைக்கும், இதனால் மனதிருப்தி ஏற்படும். வியாபார அபிவிருத்திக்காக எடுக்கக் கூடிய துணிச்சலான முடிவுகள் வெற்றியை பெற்று தரலாம். திறமைக்கேற்ற உயர்வுகளும் சலுகைகளும் கிடைக்கும். பிறர் மனதை புண்படுத்த கூடிய வார்த்தைகளை தவிர்க்கவும். பொழுதுபோக்குக்காக அதிக நேரத்தை செலவிடுவீர்கள், நேரத்தை பொன்னாக கடைப்பிடிக்கவும். சிலருக்கு சரும உபாதைகள் வரக்கூடும், உடல் நலத்தில் அக்கறை எடுப்பது நல்லது. பெரியோர்களின் ஆலோசனைகள் நம்பிக்கையை ஏற்படுத்தும். வார இறுதியில் சிக்கல்கள் சீரான நிலைக்கு திரும்புவதுடன் இறை சித்தம்படி சிறப்பான பாதையும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா

சந்திராஷ்டமம்
ஒக்டோபர் 12ஆம் திகதி மாலை 10.22 மணியிலிருந்து ஒக்டோபர் 15ஆம் திகதி காலை 07.46 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்.

தீவிரமோ தொய்வோ இல்லாத மிதமான போக்குடையவர்கள். மென்மையான குணம் படைத்த மிதுன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். சேமிப்பை விட செலவுகளை மேற்கொள்வீர்கள். விநோதங்களில் ஈடுபடும்போது அதிக கவனம் தேவை. அறிமுகமற்ற நண்பர்களின் சகவாசங்களினால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உறவினர்களிடமிருந்து வரும் எதிர்பாராத தகவல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நவீன திட்டங்களை நடைமுறைப்படுத்த சிலரின் அறிவுரைகள் சாதகமாக இருக்கக்கூடும். நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும். தூய்மையான ஆடைகள் அணிய வாய்ப்புக்கள் கிடைக்கும். எதிரிகளின் மறைமுக தாக்கங்கள் வியாபார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும், சிந்தித்து முடிவுகளை எடுப்பது நன்மையே. வார இறுதியில் நல்ல செயல்களில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் கிடைப்பதுடன் இறைவழிகாட்டிகளின் ஆசிர்வாதங்கள் கிட்டும்.

அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)

சந்திராஷ்டமம்
ஒக்டோபர் 15ஆம் திகதி காலை 07.46 மணியிலிருந்து ஒக்டோபர் 17ஆம் திகதி மாலை 07.56 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

பிடிவாதமான குணமும் சாதுர்யமும் தைரியமும் அனைவரிடமும் அன்பு கொண்ட கடகராசி  அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் பெண்களின் அன்பும் அக்கறையும் அதிகரிப்பதுடன் அறுசுவை உணவுகளும் கிடைக்கக்கூடும். புத்திசாலித்தனமான யோசனைகளும் திட்டங்களும் வெற்றியை பெற்று தரலாம். அறிமுகமற்றவர்களின் சகவாசங்களை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் சில பாதிப்புக்கள் ஏற்பட்டு நீங்கும், உடலை பராமரிப்பது நல்லது. தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் தோல்வியை தரகூடும், இதனால் பணநெருக்கடி ஏற்படலாம். அரச உதவிகள் தேடிவர வாய்ப்புண்டு. அனாவசிய கருத்து வேற்றுமை காரணமாக மன அழுத்தங்கள் உருவாகும், நாவை கட்டுபடுத்தவும். நீண்ட நாட்களின் பின் வெளிதேச செய்திகளை கேள்விப்படுவீர்கள். நலன் விரும்பிகள் தேடி வரக்கூடும். வார இறுதியில் மகான்களை தரிசித்து வாழ்க்கையில் முன்னேறும் வரம் கிடைக்கும் வாரமாக அமையும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்  
வழிபாடு: பிரம்மா


மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வாக்கு சாதுர்யம், மனோபலம் உள்ளவர்கள். சற்று அகம்பாவம் உள்ளவர்கள். அதிகார தன்மை உடைய சிம்ம ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு ஆடை, ஆபாரணங்கள் கிடைக்கக்கூடும். இசை துறையில் அதிக கண்ணோட்டத்தை செலுத்துவீர்கள், இதனால் மனஅமைதி கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வரக்கூடும். குடும்பத்தில் உறுப்பினர்களினால் சுப விசேஷங்கள் ஏற்பட இடமுண்டு. அனாவசிய முன்கோபங்கள் காரிய தடையை ஏற்படுத்தும். உஷ்ண சம்பதமான உபாதைகள் சிலரை பாதிக்கலாம், எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பிறருடை பிரச்சினைகளில் தலையிடுவதால் சிக்கல்கள் உருவாகும். பிரயாணத்தின்போது சந்திக்கும் சில பெரிய மனிதர்களால் எதிர்காலம் வளம் பெறும். பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். வார இறுதியில் கோயில் குளங்களுக்கு சென்று வருவதால் வாழ்க்கை சிறப்புறும்.

அதிர்ஷ்ட திகதி: 16
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு  
வழிபாடு: பார்வதி


உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

நீதி தவறாமை, கண்ணியம், நேர்மை, கனிவான உள்ளம், சுபாவத்தில் கலகலப்பான கன்னி ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு வெளிதேசங்களிருந்து எதிர்பாராத செய்திகள் வந்து சேரும். பணவரவுகள் சீராக அமையாது. பணம் சம்பாதிப்பதில் அதிக அக்கறை எடுக்கவும். புதிய திட்டங்களை முழு அவதானத்துடன் முன்னெடுக்கவும். விநோத விளையாட்டுக்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகளை மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் இருந்த தடுமாற்றங்கள் விலகி புதிய தொடர்புகள் தேடி வரக்கூடும். பெண்களால் குடும்பத்தில் நிம்மதி ஏற்படக்கூடும். திறமைக்கேற்ற உயர்வுகளும் சலுகைகளும் கிடைக்கும். அவசரத்தில் பேசும் வார்த்தைகள் மனஅமைதியை குலைத்துவிடும். வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். வார இறுதியில் மனநிறைவு தரக்கூடிய நிகழ்வுகள் ஏற்படக்கூடும். புது எண்ணங்கள் மேலோங்கும் வாரம் இது, பொறுப்புடன் செயல்படும் காலமிது.

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்


சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.

எவரையும் எதையும் ஒருமுறை பார்த்ததுமே துள்ளியமாக எடைபோடக்கூடியவர்கள், ஆடம்பரமான வாழ்கை உள்ள துலா ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு கடினமான காரியங்களை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் பெண்களின் ஆதரவு அதிகரிப்பதுடன் உற்சாகமும் ஏற்படும். வியாபார அபிவிருத்திக்காக புது தொடர்புகள் தேடிவருவதுடன் இதனால் பணவரவுகள் அதிகரிக்கலாம். புண்ணிய தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும், இதனால் மனநிம்மதி ஏற்படும். சில சரும நோய்கள் வந்து நீங்கும். ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும். புதிய நட்புக்கள் நம்பிக்கை தரக்கூடும். வேண்டாத வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, நாவடக்கத்துடன் செயற்படவும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேர வாய்ப்புண்டு. வார இறுதியில் தெளிவான சிந்தனைகள் உருவாகுவதுடன் தோல்விகள் நிலைமாறி ஏற்றம் பெறும் வேளையிது.

அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்  
வழிபாடு: சிவன் (சூரியன்)


விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட எளிமையை விரும்பும் விருச்சிக ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு நண்பர்களுடன் ஒன்று சேரும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும். வெளிதேசங்களில் இருந்து கிடைக்கும் தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடும். பணவரவுகள் எதிர்பார்த்தபடி அமையாது. அதிகாரிகளின் அனாவசிய செயல்களினால்; மனஉளைச்சல்கள் ஏற்படலாம். தொழில்களை விருத்தி செய்வதற்கு அரசாங்க ஆதரவுகள் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் பெண்களின் அன்பும் பாசமும் நம்பிக்கையை தரும். பிரச்சினைகள் துரத்தினாலும் அதிலிருந்து விலகி நிற்பது நல்லது. வாழ்க்கை தரத்தை உயர்த்த அதிக அலைச்சல் மேற்கொள்வீர்கள், அதன்மூலம் தக்க பலன்களை பெற்றிடலாம். வார இறுதியில் இறை வழிபாடுகளில் கலந்துகொண்டு நன்மையான காரியங்களில் செயற்படும் நாட்கள் இது.

அதிர்ஷ்ட திகதி: 10
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்  
வழிபாடு: சிவன் (சூரியன்)


மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தலைகுனிவு ஏற்பட்டாலும் மற்றவர்களுக்கு சேவை செய்வதிலும் பொது நலனில் அக்கறை கொண்டவர்களுமான தனசு ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு விநோதங்களில் விபரீதம் ஏற்படாத வண்ணம் செயற்படவும். அழகிய ஆடை, அணிகலன்கள் பரிசாக கிடைக்கக் கூடும். தொழில் வளர்ச்சிக்காக அதிக அலைச்சலை மேற்கொள்ளவேண்டியிருக்கும். அயராத உழைப்பின் பலனை உடனுக்குடன் பெறுவீர்கள். மற்றவர்களின் கூர்மையான நாவுகள் மனதை காயப்படுத்தக்கூடும், பொறுமையுடன் இருக்கவும். வெளிதேச செய்திகள் வாழ்க்கையில் எதிர்பாராத மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உடலுக்கு ஒவ்வாத உணவுகளினால் உடல் உபாதைகள் ஏற்படக்கூடும், எனவே உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். நண்பர்களிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் பெண்களின் அன்பும் பாசமும் அதிகரிக்கலாம். வார இறுதியில் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதனால் அது குலத்திற்கு நன்மை சேர்க்கும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்  
வழிபாடு: பெருமாள்

 

உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யாத மனதில் பட்டதை பளிச்சென பேசும்  பழக்கமுடைய மகர ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் அதிகாரிகளின் அதிருப்தியான செயல்கள் வியாபார முன்னேற்றத்தை பாதிக்கக்கூடும். அவதானத்துடன் செயற்படவும். திறமைக்கேற்றபடி உயர்வுகளும் சலுகைகளும் கிடைக்கும். பெண்களுடன் சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட இடமுண்டு, வார்த்தைகளை பிரயோகிக்கும்போது நிதானம் தேவை. இசை துறையில் அதிக அக்கறை செலுத்திவீர்கள், இதனால் மனஅமைதி கிடைக்கும். அறிமுகமற்ற நட்புக்களின் பழக்கங்கள் விபரிதத்தை ஏற்படுத்தக்கூடும். குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை அதிகரிப்பதுடன் மகிழ்ச்சியும் ஏற்படும். உஷ்ண சம்பதமான உபாதைகள் சிலரை பாதிக்கலாம், உடலுக்கு நன்மை தரும் உணவை கடைப்பிடிக்கவும். வார இறுதியில் மகான்களின் நீண்ட ஆயுளை பெற்று வளமுடன் வாழ வழிகிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்  
வழிபாடு: பிரம்மா  


அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மாறுபட்ட குணங்களை கொண்டவர்களிடமும் யதார்தமாக பேசி, பிறர் மனதை அடக்கி ஆளும் கும்ப ராசிக்காரர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் விடாமுயற்சியுடன் முன்னெடுக்கும் திட்டங்கள் தடையின்றி நிறைவேறும். பணவரவுகள் தாமதத்தை ஏற்படுத்தக் கூடும். பணம் சம்பாதிப்பதில் அதிக அக்கறை கொள்ளவும் குடும்பத்தில் உற்றார், உறவினர்களுக்கிடையே அன்யோன்யம் பலம் பெறும். இதனால் மகிழ்ச்சி ஏற்படும். வெளிநாட்டு செய்தி புதிய வழியை காட்டலாம். அரசாங்கத்தினால் ஆதாயங்கள் கிடைக்க இடமுண்டு. துஷ்டர்களின் நட்புக்கள் கவலையை ஏற்படுத்தும், எனவே கவனமாக இருப்பது நல்லது. எதிரிகளினால் பிரச்சினைகள் உருவாகும். பொழுதுபோக்குகளுக்காக சேமிப்பை விட செலவுகளை மேற்கொள்வீர்கள், சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். வார இறுதியில் புண்ணிய பூஜைகள் வாழ்வை வழிநடத்தும்.  

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்


பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்கும் நீங்கள் பலரையும் நம்பி ஏமாந்து  போவீர்கள். ஒரு காலகட்டத்துக்கு பிறகு உங்களை மட்டுமே நம்பும் மீன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு உடலால் சில சிரமங்கள் ஏற்படக்கூடும். தேக சுகத்தை கவனிக்கவும். புதிய முயற்சிகளில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். பிறர் பிரச்சினைகளை பேசுவதன் மூலம் அது நமக்கே பகை உண்டாக்கும். குடும்பத்தில் விசேஷங்கள் நடைபெறும், அதன் மூலம் உறவினர்கள் ஒன்றுகூடும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும். நாவுக்கு சுவையான உணவினால் மனதிருப்தி ஏற்படலாம். நீண்ட தூரசெய்திகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் விரித்தியில் பாதிப்புக்கள் ஏற்படுவதுடன் பணநெருக்கடிகள் ஏற்படக்கூடும். தூய ஆடைகள் அணிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடைய இடமுண்டு. வார இறுதியில் புண்ணிய யாத்திரைகளும் நற்செயல்களும் செய்வதனால் நன்மைகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட திகதி: 16
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பெருமாள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .