2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

18-07-2010 தொடக்கம் 24-07-2010 வரையான ராசிபலன்கள்

A.P.Mathan   / 2010 ஜூலை 18 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

18-07-2010 தொடக்கம் 24-07-2010 வரையான ராசிபலன்கள்

இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை நன்மை தரும் கிரகமாகும். உறவினர்களின் திடீர் வரவுகளால் மன தைரியமும் பொருள் வரவும் உண்டாகலாம். சகோதர சகோதரிகளுடன் வீண் மன சஞ்சலங்களும் பிரச்சினைகளும் உருவாகும். புதிய வீடுஇ நிலம் வாங்குவதற்காக வங்கிகள் மூலமாக எதிர்பார்த்து இருந்த உதவித் தொகைகள் கிடைக்கும். தந்தை- மகன் உறவில் பிரச்சினைகள் வர இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லதாகும். வெளிநாட்டு விடயங்களில் எதிர்பார்த்த நபர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். யாத்திரைகளால் ஆதாயம் இல்லை. பெண்கள் விடயத்தில் அவப்பெயர்கள் ஏற்பட இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளுடன் மனக்கசப்புகளும் அவர்களால் பணி இடமாற்றமும் ஏற்படலாம். செய்தொழிலில் பங்காளிகளுடன் இருந்த மன சஞ்சலங்கள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள்.
தாய் வழி மாமன் மூலம் சிற் சில பிரச்சினைகள் வந்து சேரும். பூர்வீக சொத்து சம்பந்தமாக வழக்கு விசயங்களில் எதிர் பார்த்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். ஆலயத் தொண்டுகளிலும் பொதுநலச் சேவைகளிலும் பிரியமுடன் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும். கணவன்- மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். தந்தை- மகன் உறவுகளில் வெகுகாலமாக இருந்துவந்த பிரச்சினைகள் குறைந்து மனநிம்மதி அடைவீர்கள். கணவன்- மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். புதிய வீடு மற்றும் நில புலன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றிபெறலாம். தீராத நாட்பட்ட நோய்கள் தீருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். வங்கிகளின் மூலம் எதிர்பார்த்து இருந்த பணம் கை வந்து சேரும். காதல் விடயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சற்று சுமாராகவே இருப்பதால் புதிய கடன்களை வாங்க முயற்சி செய்வீர்கள். யாத்திரையின்போது சம்பந்தம் இல்லாத நபர்களால் சில காரியங்களை நிறைவேற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பங்காளிகளுடன் செய்தொழில் விடயங்களில் சற்று பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது. நீண்ட காலமாகத் தடைபட்டு வந்த குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிக கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். கணவன்- மனைவி உறவுகளுக்குள் சிறிய பிரச்சினைகளுக்காக வீண் மனக் கசப்புகள் வந்து சேரும். சமுதாய நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் பெயர் புகழ் ஏற்பட்டு அதனால் மன மகிழ்ச்சி அடையும் காலமாகும். தாயின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் வெகுவாகக் குறைவதன் மூலம் மருத்துவச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்த்து இருந்த உதவிகள் கிடைக்கும். தீர்த்த யாத்திரைகள் சென்று வருவதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்பட்டு விலகும். மாமன் வழியின் மூலமாக எதிர்பாராத சில ஆதாயங்கள் அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் பரிசுகள் மற்றும் பாராட்டுக்களுடன் நல்ல மதிப்பெண்களையும் பெறுவார்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். நீண்ட காலமாக வராமல் இருந்த கடன் கொடுத்த பணம் பொருட்கள் திரும்பக் கைக்கு வந்து சேரும். பங்காளிகளுடன் சேர்ந்து நடத்தும் கூட்டுத் தொழிலில் காரணமற்ற பிரச்சினைகள் உருவாக இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லதாகும். வீட்டைத் திருத்தி கட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள். குழந்தைகளின் மன மகிழச்சிக்காக நீண்ட தூர உல்லாசப் பயணங்களை மேற்கோண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். காணாமற்போன பொருட்கள் காவல் துறையினரின் உதவிகளால் திரும்பக் கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்று குறையும். கணவன்- மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். வண்டி வாகனங்களில் மிகுந்த கவனமுடன் யாத்திரை செய்வது நன்று. வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று வர வாய்ப்பு உள்ள காலமாகும். தாயின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். சமுதாய முன்னேற்றம் மற்றும் பொதுநலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயர் புகழ் அடைவீர்கள். வெகுதூரப் பயணங்களால் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும் காலமாகும்.
பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சினைகளும் மனக் குழப்பங்களும் வர இருப்பதால் கவனமுடன் இருக்கவும். அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும் காலமாகும். வீட்டைத் திருத்திக் கட்டி அலங்காரம் செய்வதில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். பழைய கடன்களை அடைத்துவிட்டுப் புதியகடன் வாங்குவீர்கள். உடம்பில் வாயு மற்றும் காய்ச்சல் போன்ற உபாதைகள் வந்து போகும். யாத்திரையின்போது வாகனங்களில் மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வரவும். மற்றவர்களை நம்பி பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும்.
நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்து இருந்த பண உதவிகள் கிடைக்கும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். புதிய கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். கணவன்- மனைவி உறவுகளில் காரணமற்ற வீண் பிர்ச்சினைகள் உருவாகி மனக் கசப்புகள் ஏற்படலாம். புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். வட்டித் தொழிற் செய்வோர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். விவசாயம் செய்வோர்கள் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது. வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று வருவார்கள். நண்பர்கள் உறவினர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்துக்கள் வந்து சேரும். காதல் விடயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நன்றாகும். தந்தை வழிப் பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். உடம்பில் வாயு வயிறு போன்ற உபாதைகள் வந்து போகலாம். நீண்டதூரப் பயணங்களின் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும் காலமாகும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். பொதுநலத் தொண்டுகளில் ஈடு படுவோர்கள் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் மன அமைதியுடன் சந்தோஷம் நிலவும் காலமாகும். பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படுவதுடன் பொருட் செலவுகளும் ஏற்படலாம். குலதெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நீண்டதூரப் பயணங்களைத் தள்ளிப்போடுதல் நல்லது. பெண்களால் தென் திசையில் இருந்து நல்ல செய்திகளுடன் பொருள் வரவுகள் உண்டாகலாம். யாத்திரையின்போது மிக கவனமுடன் சென்று வருதல் நல்லது. சொத்து சம்பந்தமான வழக்கு விடயங்களில் பெரியவர்களின் உதவியால் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவோர்கள் மீது வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக இருப்பதால் கவனமுடன் செயல் படவும். யாத்திரையில் பெரிய மனிதர்கள் அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகளின் சந்திப்புக்களால் நன்மை அடைவீர்கள். உடல் நிலையில் கண் காதுகளில் கவனமுடன் இருந்து வரவும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். தீராத நாட்பட்ட நோய்கள் தீர புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உடம்பில் கண் காதுகளில் சிற்சில உபாதைகள் வந்து போகும். நாட்பட்ட சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் மிகு எச்சரிக்கையுடன் இருக்கவும். விட்டுப்போன பழைய பிரச்சினைகளால் மீண்டும் தொல்லைகள் வந்து நீங்கும். வராத நாட்பட்ட கடன் கொடுத்து இருந்த பணம் மற்றவர்களின் தலையிடுதலால் திரும்பக் கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வி பயிலும் இடங்களில் அவப் பெயர்கள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் கல்வி பயிலுதல் நல்லது. வீடு மற்றும் தொழிற்சாலைகளைப் புதிய இடங்களுக்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வேண்டாத விடயங்களில் தலையிட்டு வீண் சிக்கல்களில் மாட்டிக்கொண்டு மன நிம்மதியை இழக்காதீர்கள். குலதெய்வ ஆலய வழிபாடு செய்து வர எடுத்துக் கொண்ட முயற்சிகள் நிறைவேறும். நண்பர்களால் பொருள் நஷ்டமும் மன சஞ்சலமும் ஏற்படலாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். உத்தியோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கக் கூடிய காலமாகும். பழைய வீடு மற்றும் வாகனங்களைப் புதுப்பித்தலுக்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள். வெகுகாலமாகக் காணாமற்போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது. சகோதர சகோதரர்களின் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காக புதிய கடன்களை வாங்குவீர்கள். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை வந்து சேரும் காலமாகும். நாட்பட்ட பழைய வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். வெகுகாலமாக எதிர்பார்த்து இருந்த வங்கி உதவித் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வீடு வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் இன்னும் சிறிது கால தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்துறையினருக்கு நினைத்த இடங்களில் பணி இட மாற்றமும் பதவி உயர்வுகளும் உண்டாகும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்க எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். குடும்பச் சொத்துக்கில் இருந்து வந்த பிரச்சினைகள் இன்னும் சிறிது காலம் நீடிக்கும். வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்த்தல் மூலம் புதிய கடன்கள் ஏற்படலாம். மஹான்களின் தரிசனங்களால் பிரச்சினைகள் குறைந்து மன நிம்மதி அடையும் காலமாகும். யாத்திரையின்போது மிகுந்த கவனமுடன் சென்று வருதல் சிறந்ததாகும். விடுபட்டுப்போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரும் காலமாகும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். வெகுகாலமாக விட்டுப்போன பழைய உறவுகள் மீண்டும் தொடரும் காலமாகும். ரேஸ் அதிர்ஷ்டலாபச் சீட்டு போன்ற விடயங்களில் பணம் மற்றும் பொருட்களை ஏமாற வாய்ப்புகள் உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. மாணவர்களுக்கு கல்வி பயிலும் இடங்களில் சிற்றில சச்சரவுகள் வர இருப்பதால் மிகுந்த கவனமுடன் கல்வி பயிலுதல் சிறந்ததாகும். வேற்று மதத்தவரால் எதிர்பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம். பெண்களால் வட திசையில் இருந்து பொருள் வரவுகள் உண்டாகும். நாட்பட்ட அரசு சம்பந்தமான வழக்கு விடயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரத்தில் இதுநாள்வரை இருந்து வந்த நெருக்கடிகள் மாறி பணப் புழக்கம் நன்றாக இருக்கும். உறவினர்களின் வரவுகளால் எதிர்பாராத பணச் செலவுகள் ஏற்படலாம். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளை சற்று தள்ளிப் போடுதல் நல்லது. உடல்நிலையில் காய்ச்சல் மற்றும் உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம். வேற்று மதத்தவரால் வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். உடம்பில் தலைவலி முதுகுவலி போன்ற உபாதைகள் வந்து போகலாம். கணவன்- மனைவி உறவுகளில் இன்னும் சற்று பிரச்சினைகள் வந்து போகலாம்.
உத்தியோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய காலமாகும். பழைய வீடு மற்றும் வாகனங்களைப் புதுப்பித்தலுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆலய வழிபாடுகளுக்காக நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் மன நிம்மதி அடைவீர்கள். வெளிநாடுகள் சென்று வருதல் போன்ற விடயங்களில் கவனம் தேவை. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--