2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (19.12.2010 - 25.12.2010)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (19.12.2010 - 25.12.2010)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

கம்பீரமான தோற்றமும் விடய ஞானமும் நேருக்குநேர் சந்திக்கும் துணிவும் கொண்ட மேட ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு அனைத்து காரியங்களை உற்சாகத்துடன் செயல்படுத்தலாம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். நாவுக்கு சுவையான உணவு உண்ணலாம். பெண்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கக்கூடும். இசையில் அதிக நாட்டம் காட்டுதல். பெரியார்களின் ஆதரவு நம்பிகை தரக்கூடும். வியாபாரத்தில் புதிய நுட்பங்களை புகுத்தி அதிக லாபத்தை பெற்றுக்கொள்ளலாம். தூர பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, அவதானம் தேவை. எதிர்பார்த்த பணவரவுகள் உரிய நேரத்தில் வந்து சேரும். வார இறுதியில் ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடுவதனால் மனதில் துயரங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட திகதி: 19
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

அந்தஸ்த்து பொலிவுமிக்க தோற்றமும்; பிறருக்கு அடிபணியாதவரும் சகிப்பு தன்மையும் கொண்ட இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு அரசாங்க உதவிகள் தேடிவரக்கூடும். புதிய ஆடை, ஆபரணங்கள் அன்பளிப்பாக கிடைக்கும். குடும்பத்தாருடன் உல்லாச பயணங்கள் செல்ல வாய்ப்பு கிடைக்கும், இதனால் அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் செல்வதால் நன்மைகள் ஏற்படும். வியாபார வளர்ச்சிக்கு மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கக்கூடும். தீய நட்பிலிருந்து விலகி நிற்பது நல்லது. எடுத்த காரியங்களை முடிப்பதற்கு அதிக அலைச்சல்கள் ஏற்படும். பணபிரச்சினைகளின் போது பிறரின் உதவி கிடைக்கக்கூடும். சரும நோய்கள் வந்து நீங்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். வார இறுதியில் பகைவர்களின் சிக்கல்களிருந்து எச்சரிக்கையாக செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்
மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9-பாதங்கள்.

புன்னகை தவழும் முகமும் பிறரை கவரும் வசீகரமும் தனி ஆற்றலினால் காரியத்தை சாதிக்கும் மிதுன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் அன்பையும் ஆதரவையும் முழுமையாக பெற்றுக்கொள்ளலாம். அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். திறமையான திட்டங்களில் மூலம் நல்ல பயன்களை அடையலாம். வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும், இதனால் பணவரவு ஏற்படும். நண்பர்களுடன் தூரபிரயாணங்கள் செல்ல வாய்ப்பு கிடைக்கும். புதிய செய்திகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும். பெண்களுடன் எதிர்பாராத வாக்குவாதங்களுக்கு இடமுண்டு. வார்த்தைகளை நிதானத்துடன் பிரயோகிக்கவும். காணாமல்போன பொருள் கிடைக்கக்கூடும். வார இறுதியில் பெரியார்களின் ஆலோசனைகள் வாழ்வை மேம்படுத்த உதவும்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், நீலம்
வழிபாடு: நவகிரகம்
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

சுறுசுறுப்பும் விழிப்புணர்வும் அழகிய தோற்றமும் இனிய சுபாவமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் இசையில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். நண்பர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் கிடைக்கக்கூடும். மனதில் உற்சாகத்தோடு நன்மையான செயல்களில் ஈடுபடலாம். இனிமையான தூக்கம் கிடைக்கும். குடும்பத்தில் பெண்களின் அனுசரிப்புக்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுவையான உணவுகள் கிடைக்கும். பொருள் வரவு ஏற்படக்கூடும். வியாபார முன்னேற்றத்திற்காக அரச ஊழியர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும். சில இடமாற்றங்களின்போது பிறரின் உதவிகள் பக்கபலமாக இருக்கும். புதுமையான பொருள் காணக்கிடைத்தல். வார இறுதியில் உறவினர்களுடன் வெளிபிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.  

அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்
மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

நிமிர்ந்த நெஞ்சமும் நேர்கொண்ட பார்வையும் வாக்குவன்மையும் வணங்கா தன்மையும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும். விநோத விளையாட்டுக்களில் ஈடுபடும்போது மிகவும் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய சாதனங்களை கொண்டு ஆதாயம் அடையலாம். இசையில் அதிக நாட்டம் செலுத்துவீர்கள்.  சேமிப்பைவிட செலவுகள் அதிகரிக்கும். நண்பர்கள் விட்டுக்கொடுத்து செயல்படுவார்கள். குடுபத்தில் உறவினர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் கிடைக்கக்கூடும். பகைவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, நாவடக்கம் அவசியம். உஷ்ண சம்பந்தமான உபாதை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். வார இறுதியில் இறைவனை நம்பிக்கையோடு தரிசிப்பதால் நன்மைகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட திகதி: 21
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டுதுணி
வழிபாடு: குருபகவான்உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

எளிமையும் வலிமையும் இணைய உண்மைக்கு மதிப்பளித்து அதன்படி வாழ எண்ணும் கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்காக அதிக அலைச்சல்களை மேற்கொள்வீர்கள். அரசாங்க வேலை வாய்ப்புக்கள் தேடிவரக் கூடும். அறிமுகமற்ற நட்புக்களை தவிர்க்கவும், இல்லாவிடின் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும். பணப்பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பணம் சம்பாதிப்பதில் கடின முயற்சி தேவை. வெளிப்பயணங்கள் செல்வதன் மூலம் புதிய அனுபவங்களை பெற்றுகொள்ளலாம். மனதில் பயங்கள் தோன்றும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், இதனால் உறவினர்களின் வருகை ஏற்படக்கூடும். சுவையான உணவுகள் உண்ணுதல். பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும். வார இறுதியில் கவலைகள் மறைந்து உற்சாகத்துடன் பணிகளை செய்யலாம்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

நீதியையும் நேர்மையையும் துணையாக கொண்டு காரியத்தில் ஈடுபட்டு கடமையைச் செய்யும் துலாம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நண்பர்கள் இன்ப துன்பங்களின்போது ஒன்றுபட்டு செயற்படுவார்கள். தொழிலில் புதிய தொடர்புகள் தேடிவர வாய்ப்புண்டு. எதிர்பார்த்த பணவரவுகள் உரிய நேரத்தில் கிடைக்கும். திறமையான சாதனைகளை செயற்படுத்துவதால் வெற்றி அடையலாம். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கக்கூடும். நண்பர்களுடன் விநோத விளையாட்டுக்களுக்கு ஆடம்பர செலவுகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் காணப்படும். அழகிய ஆடை, உபகரணங்கள் பரிசாக கிடைக்ககூடும். வாகன சாரதிகளுக்கு தூரபிரயாணங்களின் மூலம் அதிக லாபம் கிடைக்கும். வார இறுதியில் மனதில் சிறு சஞ்சலங்கள் வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்:
டிசெம்பர் 18ஆம் திகதி மாலை 9.47 மணியிலிருந்து டிசெம்பர் 20ஆம் திகதி காலை 04.07 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

முன்கோபம் அதிகம் உள்ள மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் மதிமந்திரியாக வலம் வரும் விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு இன்பகரமான செய்திகள் வந்து சேரும், இதனால் மனதில் கவலைகள் நீங்கி உற்சாகம் கிடைக்கும். புதுமையான பொருட்களை காணக்கிடைத்தல். திருடர்களிடம் அவதானம் தேவை. திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். குடும்பத்தில் பெண்களின் உதவிகள் கிடைக்கக்கூடும். ஆரோக்கியமான உணவு கிடைக்கும். புதிய திட்டங்கள் நற்பலனை தரக்கூடும். தீய நண்பர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களுக்கு இடமுண்டு. வார்த்தை நிதானத்துடன் பிரயோகிக்கவும். வியாபாரத்தில் தடைகள் விலகி அதிக லாபம் ஏற்படும். வார இறுதியில் தெய்வீக அனுஷ்டானங்கள், யாத்திரைகள் செல்ல வாய்ப்பு கிட்டும்.    

அதிர்ஷ்ட திகதி: 23
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

சந்திராஷ்டமம்:
டிசெம்பர் 20ஆம் திகதி காலை 04.07 மணியிலிருந்து டிசெம்பர் 23ஆம் திகதி காலை 07.58 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அறிவு கூர்மையுடனும் எந்த செயலையும் தைரியத்துடனும் செய்யும் ஆற்றலைபெற்ற தனசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு பிறர் மூலம் உதவிகள் கிடைக்கக்கூடும். இசையில் அதிக நாட்டம் செலுத்துவீர்கள். வியாபாரத்தை மேம்படுத்த அரசாங்க ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும்;. குடும்பத்தில் உறவினர்கள் மூலம் அழகிய ஆடை, அணிகலன்கள் பரிசாக கிடைக்கக்கூடும். புதிய வேலைகள் உங்களது முயற்சிக்கும் திறமைக்கும் ஏற்ப அமையும். மாணவர்கள் கல்வியில் சாதனைகளை வெளிக்காட்ட வாய்ப்புக்கள் கிடைக்கும். நன்மையான காரியங்களில் ஈடுபடுவதனால் மனஅமைதி ஏற்படும். சிறிய பொருள் செலவுகள் ஏற்படக்கூடும். வார இறுதியில் புதிய நண்பர்களின் அறிமுகங்கள் மகிழ்ச்சியை தரும்.

அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

சந்திராஷ்டமம்:
டிசெம்பர் 23ஆம் திகதி காலை 07.58 மணியிலிருந்து டிசெம்பர் 25ஆம் திகதி காலை 10.29 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கள்ளம் கபடம் இல்லாத உள்ளம் இயற்கையாக பெற்ற கடினமாக உழைக்கும் சுபாவம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகள் அதிக அலைச்சலை ஏற்படுத்தும். பணவரவுகள் காலதாமதத்தை ஏற்படுத்தக்கூடும். அதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும், நிதானத்துடன் செயற்படவும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். வெளி பிரயாணங்களின்போது புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்ககூடும். ஒவ்வாத உணவினால் உடல் உபாதைகள் ஏற்படும், இதனால் அதிக மருத்துவ செலவுகளை மேற்கொள்வீர்கள், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும். வார இறுதியில் கடின முயற்சியுடன் திட்டங்களை செயல்படுத்துவதனால் வெற்றி அடையலாம்.

அதிர்ஷ்ட திகதி: 24
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

சந்திராஷ்டமம்:
டிசெம்பர் 25ஆம் திகதி காலை 10.29 மணியிலிருந்து டிசெம்பர் 27ஆம் திகதி மாலை 12.48 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்தவாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

செய்யும் செயலை சிறப்பாகவும் செம்மையாகவும் செயற்படுத்தும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் பெண்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். நாவுக்கு சுவையான உணவுகளை உண்ணலாம். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் மூலம் சிறப்பான ஏற்றமும் உயர்வும் ஏற்படக்கூடும். பகைவர்களினால் சில இடையூறுகள் ஏற்படும். உறவினர்கள் மூலம் இன்பகரமான செய்திகளை கேள்விப்படுவீர்கள். புதிய காரியங்களை செயல்படுத்த பிறரின் உதவிகள் கிடைக்ககூடும். நல்ல நண்பர்களின் நட்புக்கள் தேடி வருதல், அரசாங்க வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். காணமல்போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. வார இறுதியில் இறைதலங்கள் சென்று பூஜைகள் வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 19
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி; முடிய ஆக 9-பாதங்கள்.

ஒரு கை செய்த உதவி மறு கை அறியாத வண்ணம் சுதந்திரமாக செயல்படும் மீனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் புதிய சாதனைகளை உற்சாகத்துடன் செயல்படுத்துவீர்கள். பொழுதுபோக்குகளுக்காக பிரயாணங்கள் செல்ல வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக சில இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். நண்பர்கள் மூலம் அழகிய ஆடை, உபகரணங்கள் அன்பளிப்பாக கிடைக்கும். அஜீரண சம்பந்தமான நோய் கோளாறுகள் ஏற்படக்கூடும், ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். அதிக பொருள் செலவுகள் ஏற்படக்கூடும். பெண்களுடன் அனாவசிய வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, நாவடக்கம் அவசியம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எதிர்பார்த்த பணவரவுகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வார இறுதியில் மகான்களை தரிசித்து நன்மைகளை பெற வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 25
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--