2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சிம்பாவேயில் - பாகிஸ்தான்

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், சிம்பாவே அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கவுள்ளது. இரண்டு ட்வென்டி ட்வென்டி போட்டிகள். 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இந்த தொடரில் நடைபெறவுள்ளன. இந்த தொடர் என்ன அவ்வளவு முக்கியமானதா என்ன? இல்லைதான். சிம்பாவேயில் நடந்தாலும் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தப் போகின்றது என நம்பலாம். அண்மையில் பாகிஸ்தானுக்கு துணிச்சலாக சென்று கிரிக்கெட் தொடரை சிம்பாவே நிறைவு செய்து வந்திருக்கும் நிலையில் அந்த தொடருக்காக மீண்டும் பாகிஸ்தான் சிம்பாவே செல்கின்றது. இந்த நிலையில் நாங்கள் தற்போதைய தொடருக்கு முன்னிலை கொடுப்போம். 

இம்மாதம் 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் 20-20 போட்டிகளும், முதலாம். மூன்றாம், ஐந்தாம் திகதிகளில் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. சொந்த நாட்டில் விளையாடுவதனால் சிம்பாவே அணி தனது பலத்தைக் காட்டும். 5 போட்டிகளில் குறைந்தது 1 போட்டியையாவது வெற்றி பெற முயற்சிக்கும். அதற்க்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறிவிடவும் முடியாது. உலகக்கிண்ண தொடரில் சிம்பாவே அணி பெரிய சவால் ஒன்றை வழங்கியது. பாகிஸ்தான் அணி மயிரிழையில் தப்பித்துக்கொண்டது. பாகிஸ்தானில்  நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்திய போதும் இலகுவான வெற்றியைப் பெறமுடியவில்லை. சிம்பாவே அணி சிறப்பாக போராடி இருந்தது. எனவே இந்த தொடரில் சிம்பாவே அணியை ஒரு முழுமையான பலமான அணியை எதிர்கொள்வதைப் போன்றே பாகிஸ்தான் அணி எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளுக்க்குமிடையிலான முதற்போட்டி 1992 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத தொடரில் நடைபெற்றது. 2008 ஆம் ஆண்டு உலக 20-20 தொடரில் முதல் 20-20 போட்டி நடைபெற்றது.  இரு அணிகளும் இதுவரை 51 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் 45 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் சிம்பாவே அணி வெற்றி பெற்றுள்ள அதேவேளை 1 போட்டி சமநிலையிலும், 2 போட்டிகள் கைவிடப்பட்ட நிலையிலும் நிறைவடைந்துள்ளன. 7 ட்வென்டி, ட்வென்டி போட்டிகள் இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்றுள்ளன. இவற்றில் பாகிஸ்தான் அணியே வெற்றி பெற்றுள்ளது. முதற்போட்டி 2008 ஆம் ஆண்டு உலக 20-20 தொடரில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. 4 போட்டிகள் சிம்பாவேயிலும், 2 போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெற்றுள்ளன. 

1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி சிம்பாவே நாட்டிற்கான முதல் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு ஒற்றை ஒரு நாள் சர்வதேசப்போட்டியில் விளையாடியது. இரு அணிகளுக்குமிடையில் சிம்பாவேயில் 18 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 2 போட்டிகளில் சிம்பாவே அணி வெற்றி பெற்றுள்ளது. 14 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ள அதேவேளை ஒரு போட்டி சமநிலையிலும், 1 போட்டி கைவிடப்பட்ட நிலையிலும் நிறைவடைந்துள்ளன.  

2013ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் அணி 2 - 1 என்ற ரீதியில் ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிக்கொண்டது. ஒரு நாள் சர்வதேசப் போட்டி தரப்படுத்தலில்  எட்டாவது இடத்தில் 90 புள்ளிகளுடன் இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடரில் ஒரு போட்டியில் தானும் தோல்வியை சந்திக்கக்கூடாது என்ற நிலை உள்ளது. ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் 2 புள்ளிகளை இழந்து 9 ஆம் இடத்திற்கு பின் தள்ளப்படும் நிலை உள்ளது. சோகம் என்னவென்றால் 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 1 புள்ளிதானும் கிடைக்கப்போவதில்லை. 

பாகிஸ்தான் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணி ஓரளவு புதிய அணி. எனவே இந்தப்புதிய அணி இலகுவாக சிம்பாவே தொடரில் பிரகாசிக்க முடியாது. சிம்பாவே அணி பலமில்லாத அணி என்றாலும் கூட அவர்கள் சவால்களை வழங்குவார்கள். பலமான அணிகளையே தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியும் வழங்கும் அவர்கள் பாகிஸ்தானுக்கு அவ்வாறன அதிர்ச்சி ஒன்றை வழங்கினால் நாம் அதிர்ச்சி அடையத்தேவையில்லை என்றே கூறலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .