Editorial / 2017 ஜூலை 25 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதலில் எதிர்பார்ப்புகள் உண்டு. மாறா அன்புமட்டும் காதலினுள் இணைந்தது அல்ல; இதைவிட வேறு சங்கதிகளும் இருக்கின்றன.
தேகம் சார்ந்தவையாக இருபாலாருக்கும் தேவைகள் உண்டு. ஆண், பெண் ஸ்பரிசங்கள் காதலைத் தூண்டுகின்றன. காமம் இந்தக் கைங்கரியத்தை மின்வேகத்தில் செய்யும். மிக மென்மையாகவும் கூடச் செய்யும் திறனுடையது.
நல்ல அறிவு, புத்தியுள்ளவர்கள் கூடத் திருமணத்துக்கு முன்பு காதலில் கட்டுண்டு, காமத்தின் வழியாகப் புலன் இன்பங்களை அனுபவித்து விடுகின்றனர். இதன் சரிபிழைகளைச் சொல்லத் தேவையில்லை. இதன் விளைவுகளுக்கு இவர்களே பொறுப்பானவர்கள்.
உடல் வேட்கை, அறிவை மயக்கும் மாவல்லமை பெற்றது. திருமணத்துக்கு முன்னரே அப்பா, அம்மா ஆனவர்களுக்கு, மனம் பாதிப்படைவதுமுண்டு. பொறுமையுடனான காதல் வலியது.
வாழ்வியல் தரிசனம் 25/07/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
3 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025