2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

எளியோரின் கோபம் வலியது

Princiya Dixci   / 2016 ஜூலை 18 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வானத்தில் வட்டமிட்ட பருந்து சட்டென்று கீழே பறந்து வந்தது. கோழி தன் குஞ்சுகளுடன் இரை தேடுவதைக் கண்டதும் தன் பார்வையை அவைகள் பக்கம் திருப்பியது.

அது தாய்க்கோழியுடன் நின்றிருந்த குஞ்சுகளின் மேல் பாய்ந்ததுதான் தாமதம் தாய்க்கோழி அதன் மீது ஆக்ரோஷமாகத் தாக்கியது. இதனால் பருந்து மேலே பறக்க எத்தனித்தது. 15 அடி உயரத்தைக் கடக்குமுன் பருந்தின் மீது தனது பலம் கொண்ட அளவிற்கும்மேல் உயரப் பறந்து, பருந்தை வீழ்த்திவிட்டது.

தாய்க்கோழியின் அசுரத் தாக்குதலினால் நிலத்தில் „தொப்பென... பருந்து விழுந்துவிட, மீண்டும் பருந்தின் மீது கோழி தாக்க அது பிராணனை விட்டது. இது நேரில் கண்ட உண்மை நிகழ்வாகும்.

வலிமை கூடிய மமதை கொண்டவர்களும் எளிய மனிதர்களிடம் தோற்றுப் போகலாம்.

மேலும், தாய்மையின் வலு எத்தகையது என்பதையும் இந்தச் சம்பவம் மூலம் உணரலாம். எளியோரின் உஷ்ணம் மிகுந்த கோபம் மிகவும் வலிமையானது.

வாழ்வியல் தரிசனம் 18/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .