2021 மார்ச் 01, திங்கட்கிழமை

‘கோமாளிகள் பலகோடி’

Editorial   / 2017 ஜூலை 17 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவரையும் அடிமைகொள்ளத் துடிப்பவர்கள், இந்த உலகில் அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் ஏதிலிகளின் துன்பங்கள் பற்றி, ஒரு கணமாவது சிந்திப்பார்களா?

நிலையற்ற வாழ்வு என அறிந்தும், தங்களை மாமன்னராக எண்ணியபடி கற்பனை வாழ்வுடன் சீவிக்கும் கோமாளிகள் பலகோடி.

வஸ்திரம் இல்லாமலேயே கைது செய்யப்பட்ட சர்வாதிகாரியின் வரலாற்றைக் கேள்விப்பட்டவர்கள் கூட, தங்களைச் சண்டியனாகக் கருதுவது, வேடிக்கையிலும் வேடிக்கை.

மேலாதிக்க உணர்வு, நிம்மதியைத் தரவே மாட்டாது. சாமானியனாக வாழ்வதில் உள்ள சுகம் போல, வேறு ஏதும் உண்டா ஐயா?

எல்லோரும் இந்த உலகில் சமனானவர்களே என வாயளவில் சொல்பவர்கள், அதனை மனதளவில் கூறுவதில்லை.

மனதுக்கும் பொய் உரைக்காதீர்கள்!

   வாழ்வியல் தரிசனம் 17/07/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .