2021 மே 08, சனிக்கிழமை

‘படைத்த கடவுள் என்னை வாழ்த்தியபடி’

Editorial   / 2017 ஜூன் 05 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உறக்கத்திலும் நீ என்னுடன் இணைந்திருக்க வேண்டும். விழித்ததும் உன்பார்வையுடன் காலம் கழிந்தபடி நிலைக்க வேண்டும்.  

தாயின் தந்தையின் அரவணைப்புடன் வாழ்ந்த என்னை, உன்னிடம் ஒப்படைத்தாள் என் அன்னை.  

வரவும் தெரியாமல் செலவும் எனக்கெட்டாமல், வாழ்வதே சுகமானது. என்னுடன் இவள் இணைந்த பின்னரும், தடையில்லாத நெடும் பயணத்தைத் தொடர்ந்திடக் குடை பிடிக்கும் தோழி இவள்.  

எனக்கு எனச் சேமிப்பும் சம்பாத்தியமும் ​தெரியாமலே, தெருக்களில் உலா வந்தவன். இரகசியம் இல்லாத எல்லை தொடாத பயணங்கள். இடையிடையே இன்ப துன்ப நுகர்ச்சிகள். எதிலும் கவனம் செலுத்தி, ஐக்கியப்படாத சுதந்திர அபிமானி.  

எனினும் நான் செய்த குறும்புகளும் குளறுபடிகளும் இன்னமும் அப்படியேதான். இதனை இரசிப்புடன் ஏற்பவள் அம்மாவுக்கு அடுத்ததாக எனது துணைவி. 

எழுதுகோல் என்னை இளமையாக்கியபடியே இசைந்து கொடுக்கின்றது. படைத்த கடவுள் என்னை வாழ்த்தியபடி என்றும்...    

வாழ்வியல் தரிசனம் 05/06/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X