2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பொய் பகருபவர்கள் மேடையேறக் கூடாது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவன்மை உடையவர்கள் உண்மையை மட்டுமே பேசவேண்டும். இத்தகையவர்கள்தான் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்களாகவும் மாறவும் கூடும்.

பேச்சாளர்களின் உரையை மக்கள் இரசிப்பதுடன், அவற்றை நம்புகின்றார்கள். எனவே, மக்களின் நம்பிக்கையை வலுவாக்க உண்மையையே பேச வேண்டியது முக்கியமான அம்சமாகும். பொய் பகருபவர்கள் மேடையேறக் கூடாது.  பேச்சுக்கள் பற்பல தலைப்புகளுடன் இருப்பதால் சொல்லப்பட்ட தலைப்பிலிருந்து விலகாமல் பேசுதல் அவசியம். ஆன்மிகம், இலக்கியம் விஞ்ஞானம் எனப்பட்ட விடயங்களில் அந்தந்தத் துறைசார் அறிஞர்கள் பேச்சுகளைப் பாமரர்களும் புரியும்படியாகக் கூறினால் அதுவே சிறப்பு.

தெரியாத விடயங்களை மேடையில் பேச முனைந்தால் அவமானம்தான் மிஞ்சும். மக்களை ஈர்த்துக் கொள்ளுதல் சாதாரண விடயம் அல்ல‚ எனவே கவர்ச்சியான மொழிநடையில் விடயதானங்களை நுட்பமாகப் புகுத்துதல் வேண்டும்.

வீட்டில் சதா முடங்கிக் கிடப்பதைவிட, பொது நிகழ்ச்சிகளில் சிறந்த சொற்பொழிவுகளைக் கேட்டு மகிழ்க‚ நல்ல பேச்சு ஆச்சரியகரமான இன்பம் அளிக்கும்.    

வாழ்வியல் தரிசனம் 02/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .