2021 மார்ச் 08, திங்கட்கிழமை

பிறருக்குச் சந்தோஷங்களை ஈட்டிக் கொடுப்பவனே...

Princiya Dixci   / 2016 மே 26 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறருக்குச் சந்தோஷங்களை ஈட்டிக் கொடுப்பவனே, தூய சந்தோஷங்களுடன் எக்காலத்திலும் வாழும் உரிமையுள்ள தூய ஆன்மாவாகிறான்.

தனக்காகச் செய்யும் காரியங்களால், மனிதன், உலகத்தின் ஷேமங்களை மறந்து விடுகிறான்.

ஆனால், தன் பொருட்டுப் பணியாற்றுவது தவறு அல்ல. 'நீ, இந்த உலகத்துக்கும் உரிமையுள்ளவன் என்பதனால், அதன் வளர்ச்சிக்காக உனது பங்களிப்பை வழங்குவாயாக' என்பதே ஆண்டவனின் கட்டளை எனக் கொள்க.

பிறர், தன்னை மனமார வாழ்த்தும்போது தான், தான் இன்னுமும் ஏதாவது நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமென மகிழ்ச்சியுடன், திட சங்கற்பம் செய்து கொள்கிறான்.

பூரிப்பும் புளங்காகிதமும் களிப்பும், யாராவது ஒருநபர் எங்களால் நன்மை பெற்றதன் மூலம் கிடைத்ததாய் அமைய வேண்டும்.

வாழ்வியல் தரிசனம் 26/05/2016
-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .